For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அன்று தடை செய்யப்பட்ட வீரர்.. இன்று கிரிக்கெட் அமைப்பின் தலைவர்.. முன்னாள் கேப்டனின் அதிரடி மாற்றம்!

Recommended Video

Azharuddin won in HCA elections | கிரிக்கெட் அமைப்பின் தலைவர்..அசாருதீனின் அதிரடி மாற்றம்!-வீடியோ

ஹைதராபாத் : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

முன்பு கிரிக்கெட்டில் இருந்தே மொத்தமாக தடை செய்யப்பட அசாருதீன், அந்த தடையை உடைத்ததோடு, ஒரு மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியையும் பிடித்து வியக்க வைத்து இருக்கிறார்.

எப்படி ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியை பிடித்தார்?

யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. எல்லோரையும் ஏமாற்றிய மூத்த வீரர்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. எல்லோரையும் ஏமாற்றிய மூத்த வீரர்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

தேர்தலில் போட்டி

தேர்தலில் போட்டி

கடந்த வாரம் ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவிக்கான தேர்தல் களத்தில் குதிக்க முடிவு செய்து மனு அளித்தார் முகமது அசாருதீன். அவருக்கு போட்டியாக பிரகாஷ் சந்த் ஜெயின் களத்தில் இருந்தார்.

பெரும் வெற்றி

பெரும் வெற்றி

இந்த நிலையில், தேர்தலில் அசாருதீன் 173 வாக்குகள் பெற்றார். பிரகாஷ் சந்த் ஜெயின் 73 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். அசாருதீனுக்கு ஆதரவு தெரிவித்து மற்ற இடங்களுக்கு போட்டி இட்ட அனைவரும் வெற்றி பெற்றனர்.

பெரிய சர்ச்சை

பெரிய சர்ச்சை

அசாருதீனின் இந்த வெற்றி அவரது கிரிக்கெட் வாழ்வின் முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது. கடந்த 2000மாவது ஆண்டில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இந்திய கிரிக்கெட்டை அதிர வைத்தார் முகமது அசாருதீன்.

தடையை உடைத்தார்

தடையை உடைத்தார்

அதனால், தடை செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தை நாடி தடையை உடைத்தார். இடையே காங்கிரஸ் கட்சியில் இணைந்து உத்தரபிரசதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கிரிக்கெட் நிர்வாகம்

கிரிக்கெட் நிர்வாகம்

அதன் பின் தீவிர அரசியலில் அதிகம் ஈடுபடாத அசாருதீன், ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பை கைப்பற்றி இருக்கிறார். கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ள அசாருதீன், கிரிக்கெட் நிர்வாகத்திலும் பெரிதாக சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சாதனை

சாதனை

இந்திய அணியை மூன்று உலகக்கோப்பை தொடர்களில் வழி நடத்திய ஒரே கேப்டன் அசாருதீன் மட்டுமே. 1992, 1996 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் இந்திய அணியை உலகக்கோப்பை தொடரில் வழிநடத்தி உள்ளார்.

சிறந்த பீல்டர்

சிறந்த பீல்டர்

அவருக்கு அடுத்து வெங்கடராகவன், கபில் தேவ், தோனி ஆகியோர் இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் மட்டுமே இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளனர். அசாருதீன் தன் காலத்தில் சிறந்த பீல்டராகவும் அறியப்பட்டார்.

பிசிசிஐ சிக்கல்

பிசிசிஐ சிக்கல்

பிசிசிஐ சிக்கல் நீதிமன்றத்தால் தன் மீதான தடைகளை உடைத்த அசாருதீனை பிசிசிஐ குற்றமற்றவராக கருதவில்லை. அவருக்கு இன்னும் சம்பள பாக்கி மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கப் பெறவில்லை.

Story first published: Saturday, September 28, 2019, 15:56 [IST]
Other articles published on Sep 28, 2019
English summary
Mohammad Azharuddin won Hyderabad Cricket Association president election. He was once banned by BCCI but now he won president post by election.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X