For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா - பாகிஸ்தான் தொடர்.. இரு அணி வீரர்களின் பெரும் ஆசை அதுதான்.. பாக். வீரர் வெளிப்படை பேச்சு!

லாகூர்: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தனிப்பட்ட தொடர்களை நடத்துவது குறித்து வீரர்கள் பேசியுள்ளனர்.

உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெறுவது இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் தான்.

ஆனால் அரசியல் ரீதியான பிரச்சினைகள் காரணமாக இரு நாட்டு அணிகளும் ஆசிய கோப்பை, உலகக்கோப்பை என ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன.

ஐபிஎல் ஃபிக்சிங் - ஹர்திக் பாண்டியாவுக்கு பரிசு வழங்கிய தொழில் அதிபர்.. வெடித்தது புதிய சர்ச்சைஐபிஎல் ஃபிக்சிங் - ஹர்திக் பாண்டியாவுக்கு பரிசு வழங்கிய தொழில் அதிபர்.. வெடித்தது புதிய சர்ச்சை

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்துக்கொண்டே தான் உள்ளன. ஆனால் இந்தியாவின் தரப்பில் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்களும் ஏக்கத்திலேயே காத்துள்ளனர். இந்நிலையில் தான் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இதுகுறித்து மனம் திறந்துள்ளார்.

 புஜாராவுடன் ஜோடி

புஜாராவுடன் ஜோடி

இந்திய வீரர் சட்டீஸ்வர் புஜாரா மற்றும் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆகியோர் இங்கிலீஷ் கவுண்டி கிரிக்கெட்டில் ஜோடி சேர்ந்து ஆடினர். இருவரும் அட்டகாசமான பார்ட்னர்ஷிப்களை அமைத்தனர். புஜாராவுடன் விளையாடியது குறித்து ரிஸ்வான் பேசினார். அதில், புஜாரா போன்ற சீனியர் விரர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவர் எப்படி பந்தை கவனிக்கிறார், அவரின் நிதானம் எப்படி என்பது குறித்து நான் கற்றுக்கொண்டேன்.

அணி வீரர்களின் மனநிலை

அணி வீரர்களின் மனநிலை

தொடர்ந்து பேசிய அவர், அனைவருமே இந்தியா - பாகிஸ்தான் தொடரை பார்க்க ஆசைப்படுகிறோம். ஆனால் இரு நாட்டு அரசுகளின் முடிவுகளை நம்மால் தடுக்க முடிவதில்லை. ஆனால் இரு நாட்டு வீரர்களுமே விளையாட வேண்டும் என்பதை தான் ஆசைப்படுகிறோம் என்பதை தெரிந்துக்கொண்டேன். நான் சொல்வதால் ஒரு சிறிய முன்னெடுப்பாவது நடந்துவிடாதா, என்ற ஆசையில் தான் கூறுகிறேன் என ரிஸ்வான் பேசினார்.

ரமீஷ் ராஜா போராட்டம்

ரமீஷ் ராஜா போராட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா தொடர்ச்சியாக இந்த தொடரை நடத்த போராடி வருகிறார். ஒரு கிரிக்கெட் வாரிய தலைவராக இல்லாமல், ஒரு கிரிக்கெட் வீரனாக இரு நாட்டு தொடர் நடைபெற வேண்டும் என நினைக்கிறேன். என்றாவது ஒருநாள் நடக்கும் என நம்புகிறேன். அதுவரை முயற்சி நடக்கும் எனக் கூறியுள்ளார்.

Story first published: Saturday, June 4, 2022, 16:24 [IST]
Other articles published on Jun 4, 2022
English summary
Mohammad Rizwan Opens up on India vs pakistan bilateral series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X