For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கண்ணை மூடிக் கொண்ட சச்சின்.. இப்படித்தான் இந்தியாவை தோற்கடிச்சோம்.. பாக். வீரர் தம்பட்டம்!

கராச்சி : இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் தோற்கடித்த கதையை சொல்லி இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர்.

Recommended Video

Mohammed Asif recalls Sachin closed eyes to Akhtar bouncers

அந்த குறிப்பிட்ட டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர், சோயப் அக்தர் பவுன்சரை சந்திக்க முடியாமல் கண்ணை மூடிக் கொண்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிப் கூறி உள்ளார்.

இந்தியா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றியை சிலாகித்து பேசி உள்ளார் முகமது ஆசிப்.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் உறுதி.. டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் முழு அட்டவணை இங்கே!இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் உறுதி.. டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் முழு அட்டவணை இங்கே!

இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்

இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்

இந்தியா - பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2006ஆம் ஆண்டு நடைபெற்றது, அந்த தொடரில் இந்திய அணிக்கு ஈடாக பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆடியது. முதல் இரண்டு போட்டிகள் டிரா ஆனது. இந்த நிலையில் மூன்றாவது போட்டி நடைபெற்றது.

நீண்ட பேட்டிங் வரிசை

நீண்ட பேட்டிங் வரிசை

இந்திய அணி அப்போது நீண்ட பேட்டிங் வரிசை கொண்டு இருந்தது. சேவாக், டிராவிட், லக்ஷ்மன், சச்சின், கங்குலி, யுவராஜ் சிங், தோனி, இர்பான் பதான் என எட்டு பேட்ஸ்மேன்கள் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு இது பெரும் சவாலாக இருந்தது.

பாகிஸ்தான் திணறல்

பாகிஸ்தான் திணறல்

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இர்பான் பதான் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மிரட்டினார். பாகிஸ்தான் அணி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் வீரர்கள் அப்போதே சோர்ந்து போனார்கள்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

அது பற்றி கூறிய முகமது ஆசிப், இந்தியா நீண்ட பேட்டிங் வரிசை கொண்டு இருந்தது. அவர்கள் பேட்டிங் வரிசை நீண்டு இருந்ததை கண்டு நாங்கள் கவலையில் இருந்தோம் என்றார். இந்தியா பேட்டிங் ஆடிய போது சோயப் அக்தர் கடும் வேகத்தில் பந்துவீசினார் என்றார்.

சச்சின் தடுமாற்றம்

சச்சின் தடுமாற்றம்

நான் ஸ்கொயர் லெக் திசையில் பீல்டிங் நின்று இருந்தேன். அப்போது அக்தர் வீசிய சில பவுன்சர்களை சந்தித்த போது சச்சின் கண்களை மூடிக் கொண்டார். இந்திய வீரர்கள் பேக்ஃபூட்டில் பேட்டிங் ஆடினார்கள். முதல் இன்னிங்க்ஸில் 240 ரன்கள் கூட எடுக்கவில்லை என்றார்.

பாகிஸ்தான் ரன் குவிப்பு

பாகிஸ்தான் ரன் குவிப்பு

அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் அணி 599 ரன்கள் குவித்தது. ஆறு வீரர்கள் அரைசதமும், ஒரு வீரர் சதமும் அடித்தனர். இந்திய அணி கடுமையாக பின் தங்கியது. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணியில் யுவராஜ் சிங் சதம் அடித்தார்.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

எனினும், அது ஆறுதல் சதமாகவே அமைந்தது. இந்தியா 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி 341 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரை 2 - 0 என கைப்பற்றியது. இந்த வெற்றியை பற்றி இப்போது பேசி உள்ளார் முகமது ஆசிப்.

முகமது ஆசிப் சர்ச்சை

முகமது ஆசிப் சர்ச்சை

முகமது ஆசிப் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததற்காக ஏழு ஆண்டுகள் தடை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீண்டும் பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். அது பற்றி சமீபத்தில் பேட்டியும் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 28, 2020, 20:19 [IST]
Other articles published on May 28, 2020
English summary
Mohammed Asif recalls Sachin closed eyes to Akhtar bouncers in 2006 test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X