For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க சொல்றதை எல்லாம் பண்ண முடியாது.. கேப்டன் கங்குலியையே கப்சிப் ஆக்கிய வீரர்.. நாட்வெஸ்ட் ரகசியம்!

மும்பை : நாட்வெஸ்ட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணியின் வெற்றியை அத்தனை எளிதில் மறக்க முடியாது.

Recommended Video

Natwest series 2002 | Kaif refused to follow Ganguly advice

அந்த இறுதிப் போட்டி வெற்றியின் நாயகர்களான யுவராஜ் சிங் - முகமது கைஃப் சமீபத்தில் அந்த போட்டியில் நடந்த பல சம்பவங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர்.

கேப்டன் கங்குலி பேச்சை மதிக்காமல் முகமது கைஃப் செய்த வேலையையும், அதைக் கண்ட கங்குலி பேசாமல் கப்சிப் என இருந்ததையும் பற்றியும் இருவரும் கூறினர்.

ஆமா.. நான் செஞ்சது பிரியாணியேதான்.. நம்பிருங்கப்பா ப்ளீஸ்.. கலகலக்கும் லிசா ஆமா.. நான் செஞ்சது பிரியாணியேதான்.. நம்பிருங்கப்பா ப்ளீஸ்.. கலகலக்கும் லிசா

நாட்வெஸ்ட் தொடர்

நாட்வெஸ்ட் தொடர்

நாட்வெஸ்ட் தொடர் 2002ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக இந்திய அணி பல தொடர் தோல்விகளை சந்தித்து அந்த தொடரில் பங்கேற்று இருந்தது. நாசிர் ஹுசைன் தலைமையிலான இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமான காரியம்.

இங்கிலாந்து ரன் குவிப்பு

இங்கிலாந்து ரன் குவிப்பு

அதனால், எப்படியும் இங்கிலாந்து வெல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. அதே போலவே முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 325 ரன்கள் குவித்தது. மார்கஸ் ட்ரெஸ்கோதிக் 109, நாசிர் ஹுசைன் 115 ரன்கள் குவித்தனர்.

சேவாக், கங்குலி நம்பிக்கை

சேவாக், கங்குலி நம்பிக்கை

இந்திய அணி நம்பிக்கைப்யுடன் பேட்டிங் ஆடத் துவங்கியது. சேவாக் 45, கங்குலி 60 ரன்கள் குவித்தனர். அவர்கள் ஆடிய வரை இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர்கள் ஆட்டமிழந்த பின் தினேஷ் மோங்கியா, சச்சின், டிராவிட் வரிசையாக நடையைக் கட்டினர்.

அந்த கூட்டணி

அந்த கூட்டணி

இந்திய அணி 146 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற குஷியில் இருந்தது. அடுத்த ஐந்து விக்கெட்களை எளிதாக வீழ்த்தலாம் என நினைத்தது அந்த அணி. ஆனால், இளம் வீரர்கள் யுவராஜ் சிங் - முகமது கைஃப் கூட்டணி அமைத்து ரன் சேர்த்தனர்.

யுவராஜ் விளாசல்

யுவராஜ் விளாசல்

யுவராஜ் சிங் அவ்வப்போது பவுண்டரி அடித்து வந்தார். இடையே ஒரு சிக்ஸ் அடித்தார். 38வது ஓவரில் ஹாட்ரிக் ஃபோர் அடித்து அரைசதம் கடந்தார். அப்போது இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் இடையே லேசாக துளிர் விட்டது.

கங்குலி செம உற்சாகம்

கங்குலி செம உற்சாகம்

அதிலும் கேப்டன் கங்குலி செம உற்சாகம் ஆகி விட்டார். பரபரப்பு தொற்றிக் கொண்டது. யுவராஜ் சிங் தான் இந்திய அணியை கரை சேர்க்கப் போகிறார் என முடிவே செய்து விட்டார். 38வது ஓவர் முடிவில் இந்திய அணியின் வெற்றிக்கு 72 பந்துகளில் 91 ரன்கள் தேவை.

சிங்கிள் ஓடு

சிங்கிள் ஓடு

யுவராஜ் சிங் அதிக பந்துகளை சந்தித்தால் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைப்பார் என கருதினார் கேப்டன் கங்குலி. லார்ட்ஸ் மைதான பால்கனியில் இருந்து, 39வது ஓவரின் முதல் பந்தை சந்தித்த முகமது கைஃப்பை நோக்கி "சிங்கிள் ரன் ஓடு, யுவராஜுக்கு ஸ்ட்ரைக் கொடு" என கத்தி கூப்பாடு போட்டார்.

கடுப்பான கங்குலி என்ன செய்தார்?

கடுப்பான கங்குலி என்ன செய்தார்?

ஆனால், முகமது கைஃப் சிங்கிள் ஓடவில்லை. உடனே கடுப்பான கங்குலி, யுவராஜ் - கைப் தண்ணீரே கேட்காவிட்டாலும், உடனே வாட்டர் பாய் ஒருவரை தயார் செய்தார். கைஃப் சிங்கிள் ரன் ஓடி யுவராஜ் சிங்கிற்கு அதிக ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டும் என்ற தன் திட்டத்தை சொல்ல தான் இந்த ஏற்பாடு.

அபார ஷாட்

அபார ஷாட்

அடுத்த பந்து ஷார்ட் பந்தாக வந்தது. முகமது கைஃப் தனக்கு எளிதாக வரும் புல் ஷாட் அடிக்க, பந்து நேராக சிக்ஸ் சென்றது. அத்துடன் பேசாமல் அமர்ந்து கொண்டார் கேப்டன் கங்குலி. அந்த வாட்டர் பாய் அதன் பின் உள்ளே செல்லவில்லை.

வெற்றி பெற வைத்த கைஃப்

வெற்றி பெற வைத்த கைஃப்

அன்று யுவராஜ் சிங் 69 ரன்களில் வெளியேறிய போது கடைசி வரை களத்தில் நின்று 75 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து, இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார் முகமது கைஃப். இந்த நினைவுகளை யுவராஜ் - கைஃப் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டனர்.

Story first published: Thursday, April 23, 2020, 20:01 [IST]
Other articles published on Apr 23, 2020
English summary
Mohammed Kaif refused to follow Ganguly advice and also make him silent during Natwest final match. Both Yuvraj Singh and Mohammed Kaif shared that experience.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X