இது என்னான்னு சொல்லுங்க.. அட இது ஓவியங்க.. கலகலக்க வைத்த முகம்மது ஷமி

டெல்லி: இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகம்மது ஷமியைச் சுற்றி அவ்வப்போது ஏதாவது சர்ச்சைதான் வெடிக்கும். ஆனால் இந்த லாக்டவுன் சமயத்தில் அவருக்குள் இருக்கும் இன்னொரு முகம் வெளியே தெரிய வந்துள்ளது.

ஆர்டிஸ்ட் ஷமி... லாக்டவுனில் திறமையை வெளிப்படுத்தி அசத்தல்

அதுதான் ஓவியம் வரைவது. தான் வரைந்த ஓவியத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஷமி. பேட்ஸ்மேன்களுக்கு ஒரு அச்சுறுத்தலான பந்து வீச்சாளராகத்தான் உலகம் ஷமியைப் பார்த்துள்ளது.

ஆனால் இந்த லாக்டவுன் அவரது ஓவியத் திறமையை வெளிக் கொண்டு வந்துள்ளது. இதுதவிர குக்கிங்கிலும் அவர் அசத்துவார். அதையும் அவர்தான் கடந்த வாரம் சொல்லியிருந்தார்.

என்ன பார்த்து எப்படி அப்படி சொல்லலாம்? பப்ளிக்காக முட்டி மோதி சண்டை போட்ட பாக். கிரிக்கெட் வீரர்கள்!

வெளி வரும் திறமைகள்

வெளி வரும் திறமைகள்

தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை வேறு. இதனால் தனது திறமைகளை வெளியே எடுத்து விட ஆரம்பித்துள்ளார் ஷமி. சமையல் செய்வதில் தனக்குள்ள ஆர்வம் குறித்து கடந்த வாரம் சொல்லியிருந்தார். தற்போது தனது இன்னொரு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதுதான் ஓவியம் வரைவது.

ஓவியம் வரைந்து வீடியோ

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ போட்டுள்ளார் ஷமி. அதில் தான் நீண்ட காலத்திற்குப் பிறகு ஓவியம் வரைவதில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தி ஆர்ட்டிஸ்ட் ஷமி என்றும் அதற்கு கேப்ஷன் போட்டுள்ளார். தனது ஓவியத் திறமை குறித்து என்ன நினைக்கறீங்க என்றும் தனது ரசிகர்களிடம் ஷமி கேட்டுள்ளார்.

நிறைய திறமைகள்

நிறைய திறமைகள்

ஷமியிடம் இன்னும் என்னென்ன திறமைகள் எல்லாம் ஒளிஞ்சிருக்கோன்னு தெரியலை. மனைவியுடன் மோதல் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட தனது பந்து வீச்சில் கொஞ்சம்கூட சோடை போகாமல் திறமையை முழுமையாக வெளிக் கொண்டுவந்து தான் ஒரு அபாரமான புரபஷனல் என்று நிரூபித்தவர் ஷமி என்பது நினைவிருக்கலாம். இப்போது தனது லாக்டவுன் பொழுது போக்கையும் கூட ஆக்கப்பூர்வமாக அவர் கடத்தி வருவது பாராட்ட வேண்டிய ஒன்றுதான்.

ஐபிஎல்லுக்காக ஆர்வத்துடன் காத்திருப்பு

ஐபிஎல்லுக்காக ஆர்வத்துடன் காத்திருப்பு

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடி வருகிறார் ஷமி. இந்த சீசனிலும் தனது பிரமாதமான பந்து வீச்சை வெளிப்படுத்தக் காத்திருந்தார். ஆனால் கொரோனாவைரஸ் பரவலால் போட்டித் தொடர் தள்ளிப் போய் விட்டது. எல்லா வீரரையும் போலவே ஐபிஎல் தொடருக்காக ஆர்வமாக காத்திருக்கிறார் ஷமி.. அதுவரை ஓவியங்கள் குவியட்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian bowler Mohammed Shami come up with a beautiful Art and dubbed himself as Artist
Story first published: Friday, April 10, 2020, 13:24 [IST]
Other articles published on Apr 10, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X