For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மோடி உத்தரவு... இலங்கை போட்டியில் இருந்து முகமது ஷமி நீக்கம்...!! கொளுத்தி போட்ட பாக்.

லண்டன்: மோடியின் உத்தரவால் சிறுபான்மையினரான முகமது ஷமியை, இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கவில்லை என்று பாக்.முன்னாள் வீரர் மொயின் கான் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

விளையாட்டுகளில் என்றைக்குமே மதம் பார்க்கப்படுவதில்லை. அப்படி பார்த்தால் அது விளையாட்டும் இல்லை. சாதி, மத, பேதங்களை கடந்து தான் விளையாட்டு. ஆனால் தற்போது இந்திய அணிக்கும், வீரர்களுக்கும் மத சாயம் பூசப்பட்டு வருகிறது.

அப்படி ஒரு விஷயம் தற்போது நிகழ்ந்திருக்கிறது. அதாவது முகமது ஷமி இஸ்லாமியர் என்பதால், இலங்கைக்கு எதிரான போட்டியில் சேர்க்கப் படவில்லை, அதற்கு மோடியிடம் இருந்து வந்த உத்தரவு காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவர் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

விவாதம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொயின் கானும், கிரிக்கெட் அனலிஸ்ட் ஒருவரும் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த விவாதத்தில் பேசிய மொயின் கான், 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷமி.

ஓரங்கட்டப்பட்டார்

ஓரங்கட்டப்பட்டார்

ஆனால் அப்படிப்பட்ட பவுலரை திடீரென ஓரங்கட்டியுள்ளனர். நானாக இருந்தால் அவரை ஓரங்கட்டியிருக்க மாட்டேன். ஷமி தொடர்ந்து ஆடினால் அதிகமான விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் வந்துவிடுவார்.

மோடியின் அழுத்தம்

மோடியின் அழுத்தம்

அவரது நீக்கத்தை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இந்திய அணி நிர்வாகத்துக்கு ஷமியை உட்கார வைக்க வேண்டும் என்று அழுத்தம் வந்திருக்கும் என நினைக்கிறேன். முஸ்லீம்கள் வளர்ந்துவிடக்கூடாது என்ற கொள்கையை கொண்ட பாஜக, நெருக்கடி கொடுத்துத்தான் ஷமியை பிசிசிஐ ஓரங்கட்டியிருக்கும் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

14 விக்கெட்டுகள்

14 விக்கெட்டுகள்

இந்திய அணியை பொறுத்தவரை... பும்ரா, புவனேஸ்வர் குமார் தான் பிரதான பாஸ்ட் பவுலிங் ஜோடி. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் காயம் அடைந்ததால் அதன் பின் நடைபெற்ற 3 போட்டிகளில் ஷமிதான் ஆடினார். 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 7, 2019, 17:39 [IST]
Other articles published on Jul 7, 2019
English summary
Mohammed shami not included against srilanka because he is muslim says moin khan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X