For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெறித்தன பவுலிங்.. தரவரிசையில் அதிர்வலை ஏற்படுத்திய சிராஜ்.. லோகேஷ் ராகுல் மட்டும் சும்மாவா!

லண்டன்: அதிரிபுதிரியான 2வது டெஸ்ட் மேட்சுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றது.

பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் பவுலிங்கில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினர். பும்ராவும், ஷமியும் பேட்டிங்கிலும் இந்தியாவின் வெற்றிக்கு கைக்கொடுத்தனர்.

டி20 உலகக்கோப்பை: அநியாயம்.. இந்தியாவுக்கான அட்டவணையில் குறை.. ஐசிசி மீது கடும் கோபத்தில் ரசிகர்கள் டி20 உலகக்கோப்பை: அநியாயம்.. இந்தியாவுக்கான அட்டவணையில் குறை.. ஐசிசி மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்

 டெஸ்ட் தரவரிசை

டெஸ்ட் தரவரிசை

இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசை இன்று வெளியாகியுள்ளது. இதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 901 ரேட்டிங்குடன்

தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு தரவரிசையில் 5ம் இடத்தில் இருந்த ஜோ ரூட், இப்போது 2வது இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரது புள்ளிகள் 893. மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இன்னொரு செஞ்சுரி அடித்தால், வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துவிடுவார்.

 ஜோ ரூட் டாப்

ஜோ ரூட் டாப்

அப்படியே இல்லாவிட்டாலும், இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன. ஸோ, எப்படியும் அவர் சிறப்பாக விளையாடத் தான் போகிறார். ஆகையால், இந்திய தொடர் முடிவதற்குள் அவர் முதலிடம் பிடிப்பது உறுதி. ஆனால், விராட் கோலி தான் பரிதாபமாக 5வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். தொடர் தொடங்கும் முன்பு, ரூட் இருந்த இடத்தில் இப்போது கோலி இருக்கிறார். அவரது ரேட்டிங் 776. தரவரிசையில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் இருக்கிறார். அவரது ரேட்டிங் 891. நான்காவது இடத்தில் 878 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபஸ்காக்னே இருக்கிறார். ரோஹித் ஷர்மா 773 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், ரிஷப் பண்ட் 736 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறார். பாபர் அசம், டேவிட் வார்னர் ஆகியோர் முறையே 8வது மற்றும் 9 வது இடத்தில் இருக்கின்றனர். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய லோகேஷ் ராகுல், 19 இடங்கள் முன்னேறி 37வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வாரம் மீண்டும் டெஸ்ட் ரேங்கில் இடம்பிடித்து 56 வது இடத்தில் இருந்த ராகுல், இம்முறை 37வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

 புள்ளிகளை அள்ளிய சிராஜ்

புள்ளிகளை அள்ளிய சிராஜ்

டெஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை, ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் 848 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், டிம் சவுதி, ஜோஷ் ஹாஸில்வுட், நீல் வாக்னர் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்தியாவின் பும்ரா 10வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதேசமயம், லார்ட்ஸ் டெஸ்ட்டின் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய இளம் வீரர் முகமது சிராஜ் 18 இடங்கள் முன்னேறி 38வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பது சிராஜ் தான். அவரது அக்ரெஷன் ரசிகர்கள் வெகுவாக ஈர்த்துள்ளது. பல முன்னாள் வெளிநாட்டு வீரர்கள் கூட சிராஜை வெகுவாக பாராட்டியுள்ளனர். களத்தில் அவரது வேகம், எனர்ஜி, ஆக்ரோஷம் போன்றவை அவரை வேறு ஒரு தளத்துக்கு கொண்டுச் சென்றுவிட்டது.

Recommended Video

Siraj உடன் First Meet; VVS Laxman நெகிழ்ச்சி பதிவு | OneIndia Tamil
 பெரிய முன்னேற்றம்

பெரிய முன்னேற்றம்

டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் பின்தங்கி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அஷ்வின் நான்காவது இடத்தில் இருக்கிறார். இதில், வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் 414 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 362 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளனர். முன்னதாக, இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி 42 ரன்களும், ஜடேஜா 40 ரன்களும் எடுத்தனர்.பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் சேர்த்து, இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கேப்டன் ஜோ ரூட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். இந்தியா இரண்டாம் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும், 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது ஷமி - பும்ரா ஜோடி பிரமாதமாக விளையாடியது. 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் பும்ராவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் அதகளமான வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 - 0 முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தரவரிசையில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயம், முகமது சிராஜ், லோகேஷ் ராகுல் ஆகிய இருவரும் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருப்பது தான்.

Story first published: Wednesday, August 18, 2021, 18:30 [IST]
Other articles published on Aug 18, 2021
English summary
mohammed siraj and lokesh rahul icc test rankings - சிராஜ்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X