சமாதிக்கு சென்று.. அப்பாவிற்காக கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. உணர்ச்சிகரமான போட்டோ.. வைரல்!

ஹைதராபாத்: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பின் இந்தியா திரும்பி இருக்கும் முகமது சிராஜ் தனது அப்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதிக்கு சென்று இன்று மரியாதை செய்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமான முகமது சிராஜ் மிகவும் சிறப்பாக ஆடினார். பும்ரா, ஷமி இல்லாத நிலையில் இந்திய அணியின் பவுலிங் படையை சிறப்பாக வழி நடத்தி இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இவர் ஒரு விக்கெட் எடுத்தார்.இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்த சிராஜ் மொத்தமாக ஆஸ்திரேலியாவின் சாம்ராஜ்ஜியத்தை சாய்த்தார்.

சாதனை

சாதனை

தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே சிராஜ் இந்த சாதனையை செய்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் இவர் இணைந்து சில நாட்களில் இவரின் அப்பா மரணம் அடைந்தார். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் சிராஜை கிரிக்கெட் ஆட ஊக்குவித்தது இவரின் அப்பாதான்.

செல்லவில்லை

செல்லவில்லை

அப்பாவின் மரணத்திற்கு கூட செல்லாமல் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் தங்கி ஆடிய சிராஜ் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு செல்லாமல் இவர் இந்திய அணிக்காக ஆடியது பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. இந்த நிலையில் இன்றுதான் சிராஜ் இந்தியா திரும்பினார் .

வீட்டிற்கு சென்றார்

ஹைதராபாத்தில் இருக்கும் தனது சொந்த வீட்டிற்கு சென்ற சிராஜுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. வீட்டிற்கு சென்ற சிராஜ் சில நிமிடங்களில் தனது அப்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதிக்கு சென்று மரியாதை செய்தார்.

கண்ணீர்

கண்ணீர்

அப்பாவின் சமாதியில் கண்ணீர்விட்டு சிராஜ் மரியாதை செலுத்தினார். அப்பாவின் சமாதியில் சிராஜ் மரியாதை செலுத்தும் புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இவரின் அப்பாதான் சிராஜ் இந்திய டெஸ்ட் அணியில் ஆட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார் . அவரின் விருப்பத்தின்படியே இந்திய டெஸ்ட் அணியில் சிராஜ் வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Mohammed Siraj paid tribute to his father in the graveyard after returning to India from Australia.
Story first published: Thursday, January 21, 2021, 16:17 [IST]
Other articles published on Jan 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X