For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஒரே ஒரு ஆட்டம்.. டோட்டல் ப்ளானும் க்ளோஸ்”.. பெரும் வாய்ப்பை இழந்த சிராஜ்.. குஷியில் இளம் வீரர்!

லக்னோ: தென்னாப்பிரிக்கா உடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய இளம் வீரருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 40 ஓவர்களில் 249/4 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 40 ஓவர்களில் 240 /8 ரன்களை மட்டுமே அடித்தது.

 சிராஜ்-க்கு பின்னடைவு

சிராஜ்-க்கு பின்னடைவு

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வியை விட, வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு தான் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. பவுலிங், ஃபீல்டிங் என இரண்டிலுமே மிக மோசமாக உள்ளார். ஆட்டத்தின் 38வது ஓவரில் ஆவேஷ் கான் வீசிய பந்தை க்ளாசன் தூக்கி அடித்தார். மிட் விக்கெட் திசையில் இருந்த சிராஜுக்கு நன்கு நிதானமாக பிடிக்க நேரம் இருந்தது. எனினும் கைக்கு வந்த அழகான கேட்ச்-ஐ தவறவிட்டார். இது க்ளாசன் 74 ரன்கள் அடிப்பதற்கு காரணமானது.

பவுலிங்கிலும் தடுமாற்றம்

பவுலிங்கிலும் தடுமாற்றம்

தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரிலும் சிராஜின் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டதால் ஆட்டத்தின் முடிவே மாறியது. பவுலிங்கை பொறுத்தவரையில் நேற்றைய போட்டியில் 8 ஓவர்கள் வீசி 49 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். எனினும் எந்தவொரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடருக்கு செல்வதற்கான கதவுகளை அவரே மூடிக்கொண்டது போல் அமைந்துள்ளது. பும்ராவுக்கு மாற்று வீரராக தீபக் சஹார் - சிராஜ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் சிராஜ் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே தன்னை நிரூபித்துவிட்டார். ஆனால் சிராஜ் சொதப்பி வருவதால் தேர்வுக்குழு அவரை திட்டத்தில் இருந்து நீக்கவுள்ளதாக தெரிகிறது.

ஷமி நிலைமை

ஷமி நிலைமை

இது ஒரு புறம் இருக்க, இந்திய சீனியர் வீரர் முகமது ஷமி பெங்களூரு தேசிய அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். ஒருவேளை அவர் முழு உடற்தகுதி பெற்றுவிட்டால் ஷமி தான் பும்ராவுக்கான மாற்று வீரராக தேர்வாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 7, 2022, 7:03 [IST]
Other articles published on Oct 7, 2022
English summary
Mohammed siraj is in trouble to get place in t20 world cup squad after the poor fielding in IND vs SA 1st ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X