அவர் என்னை அபியூஸ் செய்தார்... கோலி- ஸ்டோக்ஸ் இடையே வெடித்த மோதல்..முகமது சிராஜ் பகீர் குற்றச்சாட்டு

அகமதாபாத் : 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கும் பென் ஸ்டோக்ஸு-க்கும் இடையே மோதல் நடந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் மீது சிராஜ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர்தான் முதலில் சீண்டினார்: Kohli - Ben Stokes மோதல் குறித்து பேசிய Mohammed Siraj | Oneindia Tamil

இந்தியா - இங்கிலாந்து மோதும் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் போது சிராஜின் காரணமாக விராட் கோலி மற்றும் ஸ்டோக்ஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது.

இந்நிலையில் அவர்களின் வாக்குவாதத்திற்கு முக்கிய காரணமான முகமது சிராஜ் பென் ஸ்டோக்ஸ் தன்னை சீண்டியதாக சிராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

இறுதி டெஸ்ட்

இறுதி டெஸ்ட்

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இளம் வீரர் சிராஜ் ஸ்பின்னர்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் 2 விக்கெட்களை எடுத்தார்.

 கோலி மோதல்

கோலி மோதல்

ஆட்டத்தின் 13வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அப்போது களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் சிராஜிடம் ஏதோ கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த இந்திய அணி கேப்டன் கோலி, ஸ்டோக்ஸுடம் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோலி, தான் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி ஆக்ரோஷமாக பேசத்தொடங்கியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விளக்கம்

விளக்கம்

இது குறித்து ஆட்டத்தின் இறுதியில் பேசிய சிராஜ், நான் ஆட்டத்தின் 13ஆவது ஓவரை வீசிவிட்டு, பீல்டிங் செய்யச் சென்றபோது பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது பென் ஸ்டோக்ஸ் என்னிடம் சீண்டும் வகையில் பேசினார். நான் உடனே விராட் கோலியிடம் புகார் தெரிவித்தேன். அவரும் உடனே பென் ஸ்டோக்ஸிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்ட நிலையில் நடுவர்கள் வந்து சமாதானம் செய்தனர். பெரிய விஷயம் இல்லை, என தெரிவித்தார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இது குறித்து பேசிய கமெண்ட்ரி பாக்ஸில் இருந்து பேசிய க்ரீம் ஸ்வான், கோலி தான் ஸ்டோக்ஸுடம் பிரச்னை செய்துள்ளார். கோலி அவரின் விளையாட்டை பார்க்க வேண்டும். இன்று அவர் செய்தது சிறுபுள்ளை தனமாக இருந்தது என தெரிவித்திருந்தார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் தான் சிராஜ்-ஐ சீண்டியதாக தற்போது தெரியவந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mohammed Siraj’s Statment about Kohli - Stokes Argument
Story first published: Friday, March 5, 2021, 10:28 [IST]
Other articles published on Mar 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X