For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியால் என் பந்துவீச்சு வேற லெவலுக்கு சென்றது.. இளம் டெஸ்ட் வீரர் புகழாரம்

மும்பை : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோத உள்ள டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் 4 முதல் தொடங்க உள்ளது.

அந்த தொடரில் இடம் பிடித்து தன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ள மொஹம்மத் சிராஜ், தோனி மற்றும் கோலி உடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இவர் கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடினார். இந்திய டி20 அணியில் 3 போட்டிகளில் ஆடியுள்ளார்.

இந்திய அணிக்குள் எப்படி?

இந்திய அணிக்குள் எப்படி?

மொஹம்மத் சிராஜ் சமீபத்தில் நடந்த முதல் தர கிரிக்கெட் போட்டி தொடரில் ஆஸ்திரலியா ஏ மற்றும் தென்னாபிரிக்கா ஏ அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் பத்துக்கும் அதிகமான விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். அதை அடுத்தே அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அடுத்த கட்டதுக்கு போன பந்துவீச்சு

அடுத்த கட்டதுக்கு போன பந்துவீச்சு

ஏற்கனவே, இந்திய டி20 அணியில் ஆடிய போது தோனி மற்றும் கோலி ஆகியோரது யோசனைகள் தனக்கு உதவியதாக கூறினார். குறிப்பாக தோனி கூறிய ஒரு யோசனை தன் பந்துவீச்சை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று விட்டதாக குறிப்பிட்டார்.

தோனி சொன்ன அறிவுரை

தோனி சொன்ன அறிவுரை

தோனி சொன்ன அறிவுரை இதுதான். "பேட்ஸ்மேன் தன் கால்களை எப்படி நகர்த்தி ஆடுகிறார் என பார்க்க வேண்டும். அதற்கேற்ப லைன் மற்றும் லென்த் மாற்றி வீச வேண்டும்" என கூறி இருக்கிறார். இது தன் பந்துவீச்சையே மாற்றி விட்டதாக கூறினார் சிராஜ்.

கோலியால் முதல் விக்கெட்

கோலியால் முதல் விக்கெட்

அதே போல, தன் முதல் டி20யில் ஆடிய போது, கேன் வில்லியம்சனுக்கு பந்து வீசும் போது கோலி அறிவுரை கூறி இருக்கிறார். அதன்படி வீசிய சிராஜ் தன் முதல் சர்வதேச விக்கெட்டாக சிறந்த பேட்ஸ்மேனான வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

Story first published: Monday, October 1, 2018, 16:51 [IST]
Other articles published on Oct 1, 2018
English summary
Mohammed Siraj says how Dhoni’s idea helped him grow in his game. Also, remind Kohli’s encouragement.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X