துஜே தேகா தோயே ஜானா சனம்... கிடார் வாசித்து மூட் சரிசெய்த இளம் வீரர்!

சிட்னி : நம்முடைய இந்திய அணி வீரர்கள், கிரிக்கெட்டில் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் மிகவும் சிறந்து விளங்குகின்றனர்.

இதற்கு சமீபத்திய உதாரணம் சிஎஸ்கே அணி வீரர் தீபக் சஹர். இந்த சீசனில் அணி சோபிக்கவில்லை என்றாலும் தீபக் சஹருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

அதற்கு சிறந்த உதாரணம் இந்திய -ஆஸ்திரேலிய தொடரின் டி20 வடிவத்தில் அவர் இடம்பெற்றுள்ளதுதான்.

எந்த போட்டியையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.. வெற்றிக்காக போராடுவோம்.. அதுக்கான ஆரம்பம்தான் இது!

14 போட்டிகள்... 12 விக்கெட்டுகள்

14 போட்டிகள்... 12 விக்கெட்டுகள்

சிஎஸ்கே அணி இந்த சீசனில் சொதப்பினாலும் தனிப்பட்ட முறையில் அந்த அணியின் சில வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தனர். அந்த வகையில் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் இந்த சீசனில் சிறப்பாக விளையாடினார். 14 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

7 ரன்கள்... 6 விக்கெட்டுகள்

7 ரன்கள்... 6 விக்கெட்டுகள்

மேலும் இவர் டி20 வடிவத்தில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். 10 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சஹர், நாக்பூரில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

குவாரன்டைனில் சஹர்

குவாரன்டைனில் சஹர்

இந்நிலையில் ஐபிஎல்லை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் சஹர் இடம்பெற்றுள்ளார். இதையொட்டி சிட்னியில் குவாரன்டைனில் உள்ள சஹர் தன்னுடைய பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். பயிற்சியின் இடையில் தன்னுடைய மனநிலையை சரியாக வைத்துக் கொள்ளவும் அவர் தவறவில்லை.

கிடாரில் பிரபல பாடல்

கிடாரில் பிரபல பாடல்

பயிற்சிக்கு செல்வதற்கு முன்னதாக அவர் தனது கிடாரில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் பிரபல பாடலை வாசித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பயிற்சிக்கு முன்பாக தன்னுடைய மூட் என்று கேப்ஷனும் வெளியிட்டுள்ளார் சஹர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Deepak Chahar shared a video on Instagram
Story first published: Sunday, November 22, 2020, 21:05 [IST]
Other articles published on Nov 22, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X