For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுவரை 3,500 முடிஞ்சுடுச்சு... மொத்தமாக 20,000க்கு பிளான் பண்ணியிருக்கு

துபாய் : ஐபிஎல் தொடர் வரும் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த தொடர் முழுமையிலும் 20,000க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள ஐபிஎல் மருத்துவ பார்ட்னர் திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரையொட்டி கடந்த 20ம் தேதியையொட்டி 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் யூஏஇ பயணம் மேற்கொண்டனர். இதுவரை 3,500 பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஐபிஎல் தொடரில் அபுதாபியை தலைமையிடமாக கொண்ட விபிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனம் வீரர்களிடம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொள்ளவுள்ளது.

உலகத்தரமான தலைவனால் மட்டும் தான் அப்படி செய்ய முடியும்.. தோனியை புகழ்ந்து தள்ளிய ஷேன் வாட்சன்!உலகத்தரமான தலைவனால் மட்டும் தான் அப்படி செய்ய முடியும்.. தோனியை புகழ்ந்து தள்ளிய ஷேன் வாட்சன்!

வீரர்களுக்கு தொடர் பரிசோதனைகள்

வீரர்களுக்கு தொடர் பரிசோதனைகள்

ஐபிஎல் தொடர் வரும் 19ம் தேதி துவங்கவுள்ளது. இதற்கென கடந்த மாதம் 20ம் தேதியையொட்டி 8 அணிகளை சேர்ந்த 200 வீரர்களும் யூஏஇக்கு பயணம் மேற்கொண்டு 6 நாட்கள் குவாரன்டைன் உள்ளிட்டவற்றை எதிர்கொண்டனர். அவர்கள் துபாய்க்கு வந்தவுடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இரு தினங்களில் அடுத்த டெஸ்ட் செய்யப்பட்டது.

20,000 கொரோனா பரிசோதனைகள்

20,000 கொரோனா பரிசோதனைகள்

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் சிஎஸ்கே வீரர்கள் இருவர் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர் சோதனைகளாலேயே இந்த பாதிப்பு உடடினயாக கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் முழுமைக்கும் வீரர்களுக்கு 20,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விபிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனம் அறிவிப்பு

விபிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனம் அறிவிப்பு

அபுதாபியை தலைமையிடமாக கொண்ட விபிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனம் ஐபிஎல்லில் மருத்துவ பார்ட்னராக உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் வீரர்களுக்கு இதுவரை 3,500 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவம் மேலும் தொடர் முழுவதும் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் விபிஎஸ் தெரிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் -சிஎஸ்கே மோதல்

மும்பை இந்தியன்ஸ் -சிஎஸ்கே மோதல்

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கிடையில் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கென அந்த அணிகளின் வீரர்கள் மும்முரமாக தயாராகி வருகின்றனர். தொடரின் 24 போட்டிகள் துபாயிலும், 20 போட்டிகள் அபுதாபியிலும் மற்றும் 12 போட்டிகள் ஷார்ஜாவிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Story first published: Thursday, September 10, 2020, 20:35 [IST]
Other articles published on Sep 10, 2020
English summary
During the course of the tournament, we will be conducting over 20,000 tests -VPS Healthcare
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X