For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல்ல சிறப்பாதான் பந்து வீசுனாரு... அப்புறமா எல்லாருக்கும் பாடம் எடுக்க ஆரம்பிச்சுட்டாரு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இந்த சீசனில் கேகேஆர் அணியில் இணைந்துள்ளார் ஹர்பஜன் சிங்.

கடந்த 690 நாட்களாக எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்காமல் நேரடியாக ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.

மீண்டும் திணறல் ஆட்டம்.. மனிஷ் பாண்டே செய்த மிகப்பெரிய தப்பே இது தான்.. சுட்டிக்காட்டிய சேவாக்..மீண்டும் திணறல் ஆட்டம்.. மனிஷ் பாண்டே செய்த மிகப்பெரிய தப்பே இது தான்.. சுட்டிக்காட்டிய சேவாக்..

ஆயினும் நேற்றைய எஸ்ஆர்எச் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே 8 ரன்களை மட்டுமே கொடுத்து எஸ்ஆர்எச் கேப்டன் டேவிட் வார்னரின் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

3வது போட்டி

3வது போட்டி

ஐபிஎல் 2021 கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய 3வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கேகேஆர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் இந்த சீசனில் சிஎஸ்கேவில் இருந்து இணைந்துள்ளார் ஹர்பஜன் சிங்.

188 ரன்கள் இலக்கு

188 ரன்கள் இலக்கு

நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய கேகேஆர் அணி வீரர்கள் நிதிஷ் ராணா 80 ரன்களையும் ராகுல் திரிப்பாட்டி 53 ரன்களையும் எடுத்து அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தனர். எதிரணியான எஸ்ஆர்எச்சுக்கு 188 ரன்களை இலக்காக அந்த அணி அளித்தது. ஆயினும் எஸ்ஆர்எச் அணியால் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இயான் மார்கன் பாராட்டு

இயான் மார்கன் பாராட்டு

இதையடுத்து கேகேஆர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்நிலையில் அணியின் துவக்க வீரர்கள் குறித்து மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ள கேகேஆர் அணியின் கேப்டன் இயான் மார்கன், இதேபோல பௌலிங்கிலும் சிறப்பான துவக்கம் அணி ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

சிறப்பான போட்டி

சிறப்பான போட்டி

கடுமையான அணிக்கு எதிரான சிறப்பான போட்டியை நேற்றைய தினம் கேகேஆர் அணி எதிர்கொண்டதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். தங்களது அணிக்கு சிறப்பான கோச் மற்றும் சிறப்பான ஊழியர்கள் உள்ள நிலையில், நேற்றைய போட்டியை சிறப்பாக எதிர்கொண்டதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மற்றவர்களுக்கு பயிற்றுவித்த பாஜி

மற்றவர்களுக்கு பயிற்றுவித்த பாஜி

நேற்றைய தினம் முதல் ஓவரை போட்ட ஹர்பஜன் சிங் முக்கியமான டேவிட் வார்னர் விக்கெட்டை எடுத்ததுடன் 8 ரன்களில் அந்த ஓவரை சுருக்கினார். ஆனால் அடுத்ததாக அவருக்கு ஓவர் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் தன்னுடைய அனுபவத்தை கொண்டு மற்ற வீரர்களுக்கு பயிற்றுவித்ததாக மார்கன் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, April 12, 2021, 20:19 [IST]
Other articles published on Apr 12, 2021
English summary
Harbhajan using his experience to guide the others just shows that -Morgan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X