For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னது..? பயமா...எனக்கா.. நெவர்..!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசனம் பேசி நோஸ்கட் தந்த கேப்டன்

Recommended Video

எனக்கு பயமே இல்லை... பீட்டர்சனுக்கு பதில் கூறிய கேப்டன்

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தான் பயப்படவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் அதிரடியாக கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நேற்று லாட்ஸ் மைதானத்தில் நடந்தது. இரு அணிகளும் பரம வைரிகள். இந்தியா, பாக் போட்டி போலவே இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி கருதப் படுகிறது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 64 ரன்களில் தோற்கடித்தது ஆஸ்திரேலியா.

இதுவரை 4 போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அரையிறுதிக்குள் செல்ல மூன்று வெற்றிகள் அவசியம். தற்போது ஆஸ்திரேலியாவிடம் மண்ணை கவ்வியதால் அடுத்து, இந்தியா, நியூசி. அணிகளை கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

இப்படி ஒரு வீக்கான கேப்டனை நான் பார்த்ததே இல்லை.. கெவின் பீட்டர்சன் பகீர்.. யாரை சொல்கிறார்?

இது முதல்முறை

இது முதல்முறை

இலங்கையிடம் தோற்று, அதன் பின்னர் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து, பெரும் சிக்கலில் இருக்கிறது இங்கிலாந்து. ஏன் என்றால், 2015க்கு பிறகு, இங்கிலாந்து சொந்த மண்ணில் தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைவது இதுதான் முதல் முறையாகும்.

தாக்குதல் பேட்டிங்

தாக்குதல் பேட்டிங்

தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் மார்கன், தங்கள் அணியின் அட்டாக்கிங் (தாக்குதல் ஆட்டம்) பாணியை கைவிட்டது தோல்விக்கு வழி வகுத்திருப்பதாக கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது: எங்களின் அடிப்படை பேட்டிங் மந்திரம் அட்டாக்கிங் பேட்டிங்.

பார்ட்னர்ஷிப் இல்லை

பார்ட்னர்ஷிப் இல்லை

அதை நாங்கள் மறந்துவிட்டதால் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி. கடந்த 2 போட்டிகளிலும் நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததும் பெரிய பின்னடைவு. அதிலும் 230 ரன்கள் மற்றும் 280 ரன்களை சேஸிங் செய்ய முடியால் நாங்கள் தோற்றது வேதனையாக இருக்கிறது.

அருமையான பவுலிங்

அருமையான பவுலிங்

கடந்த 2 ஆண்டுகளாக அட்டாக்கிங் பேட்டிங்கைத்தான் கையில் வைத்திருந்தோம். ஆனால் இப்போது எப்படி தவறவிட்டோம் என்பதை விவாதிப்போம். ஆஸ்திரேலியா தொடக்கத்தில் நன்றாகப் பந்துவீசியது.

ஆர்வத்துடன் உள்ளோம்

ஆர்வத்துடன் உள்ளோம்

இனிவரும் போட்டிகளில் சிறப்பான பேட்டிங் எங்களிடம் இருக்கும். வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடனான ஆட்டத்தை ஆர்வத்துடன் எதிர் கொள்வோம் என்றார்.

மார்கனுக்கு பயம்

அப்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் நீங்கள் பயந்து விட்டதாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மார்கன்... அப்படியா? நானா? ஒரு போதும் அவர் கூறுவது போன்று இருந்தது கிடையாது என்றார்.

அதிக பங்களிப்பு

அதிக பங்களிப்பு

அவர் மேலும் கூறியதாவது: நிச்சயம் செமி பைனலில் நுழைவோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கேப்டனாக அடுத்த 2 போட்டிகளிலும் என்னுடைய பங்களிப்பும் அதிகமாக இருக்கும் என்றார்.

Story first published: Wednesday, June 26, 2019, 14:13 [IST]
Other articles published on Jun 26, 2019
English summary
Morgan responds to kevin pietersen's comments against Australia defeat.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X