For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சேஸிங்லயே இவ்ளோ அரைசதம் அடிச்சுருக்காங்களா... இதுலயும் தவான்தான் முதலிடத்துல இருக்காரு

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. பரபரப்பான 16 போட்டிகளை ரசிகர்கள் இதுவரை கண்டு களித்துள்ளனர்.

Recommended Video

DC vs MI: Controversial Hardik Pandya's Catch! Was Dhawan out? | OneIndia Tamil

ஐபிஎல் பல்வேறு சாதனைகளையும் தினந்தோறும் அரங்கேற்றி வருகிறது. நேற்றைய தினம் ஆர்சிபி அணி சேஸிங்கில் கலக்கல் போட்டியை தந்தது.

இப்படி ஒரு புகழ்ச்சியா... ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் ஆர்சிபி ஓப்பனர். உலகக்கோப்பைக்கு ஆல் ரெடி இப்படி ஒரு புகழ்ச்சியா... ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் ஆர்சிபி ஓப்பனர். உலகக்கோப்பைக்கு ஆல் ரெடி

தேவ்தத் படிக்கல் சதத்தையும் விராட் கோலி அரைசதத்தையும் நேற்றைய தினம் அதிரடி செய்துள்ளனர். இந்நிலையில் சேஸிங்கில் அதிகமான அரைசதங்களை அடித்துள்ள எண்ணிக்கையை அதிகமாக செய்துள்ள வீரர்கள் குறித்து காணலாம்.

16 போட்டிகள்

16 போட்டிகள்

ஐபிஎல் 2021 தொடர் கடந்த 9ம் தேதி துவங்கி தற்போதுவரை 16 போட்டிகளை கடந்து கொரோனா பரவலையும் மீறி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த போட்டிகளில் தினந்தோறும் கலக்கல் சாதனைகளையும் பரபரப்பையும் ரசிகர்கள் கண்டு களிக்க முடிகிறது.

ஆர்சிபி அபார வெற்றி

ஆர்சிபி அபார வெற்றி

கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் சிறப்பான வகையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் இந்த ஆண்டு 14வது சீசனாக நடைபெற்று வருகிறது. நேற்றைய ஐபிஎல் 2021 தொடரின் 16வது போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ஆர்சிபி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.

ஆர்சிபி 4லும் வெற்றி

ஆர்சிபி 4லும் வெற்றி

இந்த சீசனில் ஆர்சிபி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள போதிலும் நேற்றைய போட்டியில் சேஸிங்கில் சிறப்பான வகையில் ஆடியது. அதன் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரே இந்த போட்டியை சிறப்பாக முடித்து வைத்தனர்.

அதிகமான அரைசதங்கள்

அதிகமான அரைசதங்கள்

இந்நிலையில் ஐபிஎல் தொடர்களில் நடைபெற்றுள்ள போட்டிகளில் சேஸிங்கில் சிறப்பாக விளையாடி அதிகமான அரைசதம் எடுத்தவர்களில் டெல்லி கேபிடல்ஸ் துவக்க வீரர் ஷிகர் தவான் 27 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து டேவிட் வார்னர் 24 அரைசதங்களையும் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் 20 அரைசதங்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.

ரோகித் 5வது இடம்

ரோகித் 5வது இடம்

இந்த பட்டியலில் விராட் கோலி 18 அரைசதங்களுடன் 4வது இடத்திலும் ரோகித் சர்மா மற்றும் ஷேன் வாட்சன் 16 அரைசதங்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர். பீல்டிங்கை மேற்கொண்டுவிட்டு, உடனடியாக பேட்டிங்கில் ஈடுபட வேண்டிய தேவை சேஸிங்கில் ஈடுபடும் அணிக்கு உள்ளது. அதிலும் சிறப்பாக விளையாடி இந்த எண்ணிக்கையை பெறுவது சிறப்பானது.

Story first published: Friday, April 23, 2021, 17:09 [IST]
Other articles published on Apr 23, 2021
English summary
While chasing Virat Kohli managed to string 18 half-centuries
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X