For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வைரஸ் கிடக்கட்டும்.. மாப்ள டிவியை போடு.. கொரோனாவை அசிங்கப்படுத்திய இந்திய மக்கள்.. அதிர வைத்த கூகுள்

டெல்லி : 2020ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டு. இந்த ஆண்டில் தான் உலகையே பம்மிப் பதுங்க வைத்த கொரோனா வைரஸ் பரவியது.

இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடி மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்தனர். ஒரு வைரஸ் உலகையே அச்சுறுத்தியது.

இதே வினோதமான 2020ஆம் ஆண்டில் தான் இந்திய மக்கள் அந்த வைரசையே அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள்.

அதிகம் தேடப்பட்ட ஐபிஎல்

அதிகம் தேடப்பட்ட ஐபிஎல்

கொரோனா வைரஸ் போர் அடித்துப் போய் டிவியில் செப்டம்பர் மாதம் முதல் ஐபிஎல் தொடரை பார்த்து தள்ளி இருக்கிறார்கள். இணையத்தில் கொரோனா வைரஸை வீழ்த்தி ஐபிஎல் பற்றியே அதிகம் தேடி உள்ளனர். இது நம்பவே முடியாத தகவலாக பேசப்பட்டு வருகிறது.

கிரிக்கெட்

கிரிக்கெட்

பொதுவாக இந்தியாவில் கூகுள் தேடலில் கிரிக்கெட் தான் ஆதிக்கம் செலுத்தும். 2019இல் ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பையை தான் இந்திய மக்கள் அதிகம் தேடி இருந்தனர். அதே போல 2020இல் ஐபிஎல் தொடரை அதிகம் தேடி உள்ளனர்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர். ஜூலை, ஆகஸ்ட் முதல் மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும் சினிமா, கிரிக்கெட் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் எதுவும் இன்றி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சுவாரசியம்

சுவாரசியம்

இந்த நிலையில், பிரம்மாண்டமான ஐபிஎல் தொடர் நடைபெற்றது. இந்திய மக்கள் ஐபிஎல் தொடரை துவக்கம் முதலே பெரிய அளவில் ரசிக்கத் துவங்கினர். இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் கடைசி போட்டி வரை பிளே-ஆஃப் செல்ல போராடியதும் முக்கிய காரணம்.

ஐபிஎல் முதல் இடம்

ஐபிஎல் முதல் இடம்

2020இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் ஐபிஎல் முதல் இடத்தை பெற்றுள்ளது. உயிர் பயத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இரண்டாம் இடத்தையே பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தில் அமெரிக்க தேர்தல் முடிவுகள் இடம் பிடித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் வீரர்

ஆப்கானிஸ்தான் வீரர்

இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் முதல் பத்து இடங்களில் ஒரு இந்திய கிரிக்கெட் வீரரின் பெயர் கூட இடம் பெறவில்லை. இது பெரிய ஆச்சரியம் என்றால் முதல் பத்து இடங்களில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

யார் அந்த வீரர்?

யார் அந்த வீரர்?

அந்த ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷித் கான். அவரை அனுஷ்கா சர்மாவின் கணவர் என கூகுள் தவறாக காட்டியதால் அதை பார்க்க பலரும் அவரது பெயரை கூகுளில் தேடி உள்ளனர். கூகுளில் அதிகம் படிக்கப்பட்ட செய்திகளிலும் ஐபிஎல் முதல் இடத்தையும், கொரோனா வைரஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

விளையாட்டு தொடர்கள்

விளையாட்டு தொடர்கள்

2020இல் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்ட பத்து விளையாட்டு தொடர்களிலும் ஐபிஎல் முதல் இடத்தை பெற்றுள்ளது. அடுத்த இடங்களில், யுஇஎஃப்ஏ பிரீமியர் லீக், இங்கிலீஷ் பிரீமியர் லீக், பிரெஞ்சு ஓபன், லா லிகா ஆகிய தொடர்கள் இடம் பெற்றுள்ளன.

Story first published: Wednesday, December 9, 2020, 19:05 [IST]
Other articles published on Dec 9, 2020
English summary
Most searched word in google in 2020 was IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X