For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Happy Birthday Dhoni: தல தோனிக்கு 38வது பிறந்த நாள் இன்று… லெஜண்டை வாழ்த்தும் ரசிகர்கள்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று தனது 38வது வயதில் காலடி எடுத்து வைத்துள்ளார். தலை சிறந்த வீரர்களின் ஒருவரான தோனி, கிரிக்கெட்டில் தடம் பதித்த சாதனைகளை நினைவு கூறலாம்.

மகேந்திர சிங் தோனி... கிரிக்கெட் உலகின் 15 ஆண்டுகளாக வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தி. இந்தியாவின் வெற்றிக் கேப்டனாக நிலைநிறுத்திக் கொண்டவர். இவரின் தலைமையில், டி 20 உலக கோப்பை, ஒருநாள் கிரிக்கெட், மினி உலக கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதல்முறையாக முதலிடம் என இந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றார்.

முதல் போட்டியில் டக்

முதல் போட்டியில் டக்

தோனியின் வாழ்க்கை டிசம்பர் 23, 2004 அன்று வங்கதேசத்துக்கு எதிரான போட்டியுடன் தொடங்கியது. தான் அறிமுகமான முதல் போட்டியில் ரன் அவுட்டால் டக் அவுட்டாகி வெளியேறியவர். ஆனால்... பின்னாளில் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருமாறினார்.

தோனியின் வாழ்க்கை

தோனியின் வாழ்க்கை

சிறுவயதில் தோனியின் ஆர்வம் பேட்மிண்டன் மற்றும் கால்பந்து போட்டிகளில் இருந்தது. குறிப்பாக கால்பந்து போட்டிகளில் அவர் கோல் கீப்பர். கால்பந்து போட்டிகளில் மாவட்ட மற்றும் கிளப் லெவல் போட்டிகளுக்கு தோனி தேர்வு பெற்றார்.

மாற்றம் நிகழ்ந்தது

மாற்றம் நிகழ்ந்தது

அப்போது தான் அந்த மாற்றம் நிகழ்ந்தது. அவரை கிரிக்கெட் விளையாடும் படி உள்ளூர் கால்பந்து பயிற்சியாளர் அனுப்பி வைத்தார். தோனி தனது விக்கெட் கீப்பிங் திறமைகளால் பாராட்ட பெற்று கிளப் அணிகளில் இணைந்தார் (1995 - 1998). பின்னர் 16 வயதுக்குட்பட்டோருக்கான வினு மான்கட் டிராபி சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றார்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

தோனி இதுவரை 348 ஒருநாள் போட்டிகளில் 10 சதங்கள், 72 அரைசதங்கள் விளாசியுள்ளார். 2005ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த அவருடைய ஒருநாள் சர்வதேச போட்டியில் தோனி 148 ரன்கள் எடுத்தார்( இந்திய விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச ரன்).

சாதனை முறியடிப்பு

சாதனை முறியடிப்பு

அந்த ஆண்டில் இலங்கைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் எடுத்து தமது சாதனையையே அவர் முறியடித்தார். 2007ம் ஆண்டு டிராவிட்டுக்குப் பின் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியை வழி நடத்தும் பொறுப்பு அவரை தேடி வந்தது. அதே ஆண்டு இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரை இந்தியா வென்றது.

வரலாற்று சாதனை

வரலாற்று சாதனை

தொடர்ச்சியாக, அதே ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோனி தலைமையில் களம் கண்டது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடி வரலாற்று சாதனை படைத்தது. 2011 உலக கோப்பையையும் இந்தியாவுக்கு பெற்றுத்தந்து சாதனை நாயகனாக மாறினார் தோனி. 2014 சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியா சாம்பியன் ஆனது.

மொத்தம் 110 வெற்றிகள்

மொத்தம் 110 வெற்றிகள்

இதன் மூலம், டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி ஆகிய வற்றை வென்ற ஒரே கேப்டன் என்ற அசைக்க முடியாத சாதனைக்கு தோனி சொந்தக் காரரானார். ஒருநாள் போட்டியின் கேப்டனாக 2007 முதல் 2016 வரை இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். 199 போட்டிகளில் பங்கேற்று 110 வெற்றியை பெற்று தந்துள்ளார்.

டெஸ்ட் தரவரிசை

டெஸ்ட் தரவரிசை

இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் 2005ம் ஆண்டில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக தோனி களமிறங்கினார். அதன் பிறகு 2008ம் ஆண்டு டெஸ்ட் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். அவர் கேப்டனாக பதவி ஏற்றபின் 2009ம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்தது.

மிகப்பெரிய வெற்றி

மிகப்பெரிய வெற்றி

90 போட்டிகளில் விளையாடிய தோனி 6 சதம், 33 அரைசதம் உள்பட 4876 ரன்கள் எடுத்துள்ளார். 2013ம் ஆண்டு அவருக்கு பிடித்தமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அந்த டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச தனிப்பட்ட ரன்களான 224 ரன்களை எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார்.

அறிமுகமானது டி 20

அறிமுகமானது டி 20

2006ம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி 20 போட்டியில் அறிமுகம் ஆனார். 98 டி 20 போட்டிகளில் விளையாடி, 1617 ரன்கள் எடுத்துள்ளார். டி 20 போட்டியில் இரண்டு அரை சதங்கள். 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார்.

சாதனை தான் தோனி

சாதனை தான் தோனி

சர்வதேச ஒருநாள் போட்டியில் நாட் அவுட் ஆகாமல் அதிக வெற்றியை பெற்றுத் தந்தவர். ஒரு விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ரன்கள் என்ற கில் கிறிஸ்டின் (172 ரன்கள்) சாதனையை தோனி (183) முறியடித்தார்.2011ம் ஆண்டில் இலங்கை அணியை உலக கோப்பை இறுதி போட்டியில் வீழ்த்தி, 2வது முறையாக இந்தியாவுக்கு உலக கோப்பை பெற்று தந்தார்.

2015ம் ஆண்டு சாம்பியன்

2015ம் ஆண்டு சாம்பியன்

கபில்தேவிற்கு பின் இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்றுத்தந்த கேப்டன்.2007ம் ஆண்டு முதல் 2016 வரை நடைபெற்ற 6 டி 20 உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு அணியை தொடர்ச்சியாக வழிநடத்திய ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனியையே சேரும்.

ஸ்டெம்பிங்கில் சாதனை

ஸ்டெம்பிங்கில் சாதனை

சர்வதேச போட்டியில் அதிக ஸ்டெம்பிங் எடுத்த வீக்கெட் கீப்பர். ஒரு மனிதனின் கண் இமைக்கும் வேகம் 0.3 செகண்ட் ஆனால் தோனியின் ஸ்டெம்பிங் வேகம் 0.08 செகண்ட் என்பது உலக சாதனை. தோனி இதுவரை 132 பந்துகள் வீசி 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒரு விக்கெட் கீப்பரால் வீசப்பட்ட அதிகமான பந்துகள் இதுதான். உலக கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக ( 42 இன்னிங்ஸ் ) ஒருநாள் போட்டியில் ஐசிசி வரிசையில் நம்பர் 1 ரேங்கில் இடம் பிடித்த ஒரே வீரர்.

எழுந்த கேள்விகள்

எழுந்த கேள்விகள்

2015ம் ஆண்டு உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா தோற்றது. அது முதல் தோனியின் கேப்டன்ஷிப் மீது கேள்வி எழுந்தது. சிறந்த பினிஷர் என்ற பெயர் பெற்ற சிலகாலமாக தடுமாறி வருகிறார். அதன் எதிரொலியாக, நடப்பு உலக கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று. இந்தியா சாம்பியன் ஆனால்... அவரது ஓய்வு அறிவிப்பு நிச்சயம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

Story first published: Sunday, July 7, 2019, 12:07 [IST]
Other articles published on Jul 7, 2019
English summary
Most successful captain of india mahendra singh dhoni turns 38, today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X