For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த 5 வீரர்கள்.. முதல் இடத்தில் பாக். வீரர்.. 5ஆம் இடத்தில் சச்சின்!

மும்பை : சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற அடையாளம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களை நிரூபிக்கும் வீரர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

Recommended Video

Most test runs in single calender year

அப்படி பல கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் போட்டி ரன்களை குவித்த முதல் 5 வீரர்களின் பட்டியல் தான் இது.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். விவியன் ரிச்சர்ட்ஸ், கிரேம் ஸ்மித், மைக்கேல் கிளார்க் ஆகியோர் அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் ஐந்தாம் இடத்தில் இடம் பெற்றுள்ளார்.

பிளேட்டை திருப்பி போட்ட முன்னாள் அமைச்சர்.. 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்.. பரபர விசாரணை!பிளேட்டை திருப்பி போட்ட முன்னாள் அமைச்சர்.. 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்.. பரபர விசாரணை!

முகமது யூசுப்

முகமது யூசுப்

பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது யூசுப் 2006ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் உச்சகட்ட பார்மில் இருந்தார். அந்த ஆண்டில் 11 டெஸ்ட் போட்டிகளில் 1,788 ரன்கள் குவித்தார். அது இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை.

9 சதங்கள்

9 சதங்கள்

முகமது யூசுப் அந்த ஆண்டு மட்டும் 9 சதங்கள் அடித்தார். ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் போட்டி சதம் அடித்த வீரரும் அவர் தான். மூன்று அரைசதங்கள் மட்டுமே அடித்து இருந்தார். அந்த ஆண்டு அவரது பேட்டிங் சராசரி - 99.33 ஆகும்.

விவியன் ரிச்சர்ட்ஸ்

விவியன் ரிச்சர்ட்ஸ்

இரண்டாம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் இருக்கிறார். அவர் 1976இல் ஒரே ஆண்டில் 11 டெஸ்ட் போட்டிகளில் 1,710 ரன்கள் குவித்தார். அவர் அந்த ஆண்டு எந்த நாட்டில் ஆடினாலும் ரன் குவித்து மிரட்டி இருந்தார்.

இரண்டு இரட்டை சதங்கள்

இரண்டு இரட்டை சதங்கள்

விவியன் ரிச்சர்ட்ஸ் அந்த ஆண்டு 7 சதங்கள் அடித்து இருந்தார். அதில் இரண்டு இரட்டை சதங்களும் அடங்கும். 5 அரைசதங்களும் அடித்தார். அவரது பேட்டிங் சராசரி அந்த ஆண்டு 90 ஆகும். அவரது அதிகபட்ச ஸ்கோரான 291 ரன்களை அந்த ஆண்டு தான் அடித்து இருந்தார்.

கிரேம் ஸ்மித்

கிரேம் ஸ்மித்

தென்னாப்பிரிக்க அணி கேப்டனாக பல ஆண்டுகள் அசத்தலாக ஆடியவர் கிரேம் ஸ்மித். உலகின் சிறந்த துவக்க வீரர்களில் இவரும் ஒருவர். சிறந்த டெக்னிக் கொண்ட பேட்ஸ்மேன் எனவும் புகழப்படுபவர். 2008ஆம் ஆண்டில் 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஸ்மித் 1,656 ரன்கள் குவித்தார்.

ஸ்மித் அடித்த சதங்கள்

ஸ்மித் அடித்த சதங்கள்

அந்த ஆண்டு மட்டும் அவர் 6 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் குவித்து இருந்தார். அவரது சராசரி 72 ஆகும். வங்கதேச அணிக்கு எதிராக 232 ரன்கள் எடுத்து இருந்த அவர், கடினமான பெர்த் ஆடுகளத்தில் சதம் அடித்து இருந்தார்.

மைக்கேல் கிளார்க்

மைக்கேல் கிளார்க்

முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் 2012ஆம் ஆண்டு 1,595 ரன்கள் குவித்தார். 11 டெஸ்ட் போட்டிகளில், 18 இன்னிங்க்ஸ்களில் அவர் இந்த ரன்களை குவித்தார். அந்த ஆண்டு அவருக்கு மிக சிறப்பான ஆண்டு. இந்திய அணிக்கு எதிராக முச்சதம் அடித்து இருந்தார்.

ஒரு முச்சதம், மூன்று இரட்டை சதம் உட்பட ஐந்து சதங்கள் அடித்து இருந்தார். மூன்று அரைசதங்கள் அடித்து இருந்தார். அந்த ஆண்டு அவரது சராசரி 106 ஆகும். அவரது மொத்த டெஸ்ட் பேட்டிங் சராசரி 49 என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

ஐந்தாம் இடத்தில் இடம் பெற்றுள்ள ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆவார். ஆனால், ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். அவர் 2010ஆம் ஆண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் 1,562 ரன்கள் குவித்தார்.

சச்சின் அதிரடி

சச்சின் அதிரடி

அந்த ஆண்டு 7 சதம், 5 அரைசதம் அடித்து இருந்தார். அதில் இரண்டு இரட்டை சதங்களும் அடங்கும். அதே ஆண்டு தான் சச்சின் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட தன் கிரிக்கெட் கேரியரின் இறுதியில் அவர் இந்த உச்சகட்ட செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்.

Story first published: Thursday, June 25, 2020, 21:18 [IST]
Other articles published on Jun 25, 2020
English summary
Most test runs in single calender year - Sachin Tendulkar got fifth place, while Mohammed Yousuf took first place.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X