2008 முதல் 2020 வரைக்கும் ஐபிஎல்... வெற்றி பட்டியல் பற்றி பார்க்கலாமா?

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008 முதல் துவங்கி வேகத்தடை இல்லாமல் நடைபெற்று வருகிறது. ஒன்றிரண்டு சீசன்கள் மட்டும் யூஏஇயில் நடைபெற்றுள்ளது.

மற்றபடி அனைத்து ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. ரசிகர்கள் இல்லாமல் இந்தியாவில் ஐபிஎல் நடப்பது இதுதான் முதல் முறை.

இந்த ஐபிஎல் தொடரின் போட்டிகளில் அதிகமாக வெற்றி பெற்ற அணிகள் குறித்து அறிந்து கொள்வோம்.

நாளை துவக்கம்

நாளை துவக்கம்

ஐபிஎல் 2021 தொடர் நாளை சென்னையில் முதல் போட்டியுடன் துவங்கவுள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன. கடந்த 2008ல் ஆரம்பித்த ஐபிஎல்லின் பயணம் சிறிது சிறிதாக விரிவடைந்து இமாலய சாதனையுடன் சிறப்பாக தொடர்ந்து வருகிறது.

அதிகரிக்கும் அணிகள்

அதிகரிக்கும் அணிகள்

இந்த பயணத்தில் பல்வேறு வித்தியாசமான நிகழ்வுகள் மற்றும் உணர்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளது ஐபிஎல். 8 அணிகளுடன் சிறப்பாக செயல்பட்டுவரும் தொடர் அடுத்த ஆண்டிலிருந்து 10 அணிகளுடன் செயல்படவுள்ளது. இதையடுத்து போட்டிகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் விமர்சனங்கள்

தொடர் விமர்சனங்கள்

ஆண்டுதோறும் 50 நாட்களுக்கு மேல் ஐபிஎல் தொடர் சர்வதேச அளவில் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. இதன் வெளிப்பாடாக ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாகவே அதுகுறித்து சர்வதேச அளவில் விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பலரும் பாசிட்டிவாகவும் நெகட்டிவாகவும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

பணம் கொழிக்கும் போட்டி

பணம் கொழிக்கும் போட்டி

இந்தியாவின் விளையாட்டு அடையாளமாக மாறியுள்ளது ஐபிஎல் போட்டிகள். பணம் கொழிக்கும் ஒரு தொடராக உள்ளது. இதன் வருமானம் குறித்த புள்ளி விவரங்கள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் கடந்த 2008 முதல் 2020 வரையில் நடைபெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணிகள் குறித்து பார்க்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் முதலிடம்

மும்பை இந்தியன்ஸ் முதலிடம்

இதிலும் 118 வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. அடுத்ததாக 106 வெற்றிகளை பெற்று இரண்டாவது இடத்தில் சிஎஸ்கே உள்ளது. கேகேஆர் 98 வெற்றிகளையும் ஆர்சிபி 89 வெற்றிகளை பெற்று மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. இந்த சீசனில் இந்த எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mumbai Indians leads with most wins in the IPL seasons
Story first published: Thursday, April 8, 2021, 20:20 [IST]
Other articles published on Apr 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X