For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நரேந்திர மோடி ஸ்டேடியம்".. மோதேரா மைதானத்திற்கு புதிய பெயர்.. கிரிக்கெட் உலகின் பெரிய ஆடுகளம்!

அகமதாபாத்: குஜராத்தில் இருக்கும் மோதேரா மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான மிக முக்கியமான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடக்க உள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இரண்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்க உள்ளது.

டெஸ்ட் உலகக் கோப்பை இறுதிசுற்றுக்கு தேர்வாக வேண்டும் என்றால் இந்த போட்டியில் இந்திய அணி ஒன்று வெல்ல வேண்டும், அல்லது டிரா செய்ய வேண்டும். இதனால் இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அகமதாபாத்தில் உள்ள மோதேரா மைதானத்தில் ஆட்டம் நடக்க உள்ளது.

திறப்பு

திறப்பு

புனரமைப்பு பணிகளுக்கு பின் புது பொலிவுடன் இந்த மோதேரா மைதானம் இன்று திறக்கப்பட்டது. இந்த மைதானத்தில் 1.10 லட்சம் பேர் வரை அமர முடியும். கடந்த வருடம் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி இங்குதான் நடத்தப்பட்டது.

பெயர்

பெயர்

9 பிட்ச்கள் அடங்கிய இந்த மைதானம் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலம் திறக்கப்பட்டது. இதற்காக இன்று காலை பெரிய அளவில் மோதேரா மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது .

இந்த மோதேரா மைதானத்திற்கு முன்பு சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது .

மோடியின் பெயர்

மோடியின் பெயர்

இந்த நிலையில் மோதேரா மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நடக்க உள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே இதுதான் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆகும்.

பிங்க் பால்

பிங்க் பால்

இங்கு இன்று நடக்கும் முதல் போட்டியே பிங்க் பால் போட்டியாகும். இதனால் இந்த ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பல பிரபலங்கள் இன்று நடக்கும் போட்டியை காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, February 24, 2021, 22:23 [IST]
Other articles published on Feb 24, 2021
English summary
Ahmedabad Motera Stadium named after PM Narendra Modi ahead of India's 3rd test with England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X