For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெங்களூரில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆடிய டோணியை பார்க்க லஞ்சம் கொடுத்து குவிந்த ரசிகர்கள்

By Veera Kumar

பெங்களூர்: உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஆடுவதற்காக பெங்களூர் வந்த கிரிக்கெட் வீரர் டோணியை பார்ப்பதற்காக, ஐடி ஊழியர்கள் 4 பேர் பாதுகாவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து உள்ளே வந்தனர். முடி வெட்டும் தொழிலாளி, டோணிக்கு சாக்லேட்டுகளை பரிசளிப்பதற்காக எடுத்து வந்திருந்தார்.

விஜய்ஹசாரே எனப்படும் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. ஜார்கண்ட்-ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதிய போட்டி பெங்களூரின் புறநகர் பகுதியான ஆலூரில் (தும்கூர் ரோடு) இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

இப்போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தொலைவையும் பொருட்படுத்தாது, நகரின் பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர்.

இருக்கையில்லை

இருக்கையில்லை

உள்ளூர் மைதானமான அதில், ரசிகர்கள் உட்கார இருக்கை வசதி எதுவுமே கிடையாது. எனவே, பல ரசிகர்கள் சுவர் மீது ஏறி உட்கார்ந்தபடி கிரிக்கெட்டை ரசித்தனர். அதோபோலத்தான் விக்னேஸ்வர் சேகர், அதியமான் உள்ளிட்ட 4 சாப்ட்வேர் இன்ஜினியர்களும் கிரவுண்டுக்கு வந்திருந்தனர்.

ஆனால், இடமில்லை எனகூறி, பாதுகாவலர்கள் தகராறு செய்தனர். அவர்களுக்கு பணத்தை லஞ்சமாக கொடுத்து உள்ளே நுழைந்தனர் அந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.

லஞ்சம்

லஞ்சம்

இதுகுறித்து விக்னேஸ்வர் சேகர் ஒன்இந்தியாவிடம் கூறுகையில், "நாங்கள் இரவு பணியில் இருந்தோம். டோணி பெங்களூருக்கு வந்து ஆடுவதை உங்களின் ஆன்லைன் செய்தியில் பார்த்தோம். எனவே பணி முடிந்ததும், தூங்கக்கூட போகாமல் காலை 7 மணிக்கெல்லாம் கிளம்பி இங்கு வந்தோம். பாதுகாவலருக்கு மட்டும் லஞ்சமாக ரூ.1400 கொடுத்துள்ளோம்" என்றார்.

முடிவெட்டும் தொழிலாளி

முடிவெட்டும் தொழிலாளி

ஆலூர் பகுதியை சேர்ந்த முடிவெட்டும் தொழிலாளியான மஞ்சுநாத்தும் போட்டியை பார்வையிட வந்த ரசிகர்களில் ஒருவர். டோணிக்கு பரிசளிக்க சாக்லேட்டுகளை அவர் கொண்டு வந்திருந்தார். அவர் நம்மிடம் கூறுகையில், "டோணியை போன்ற ஒரு கேப்டனை இந்தியா பார்த்தது கிடையாது. அவருக்காக நான் கொண்டுவந்த கிப்ட் மிகவும் சிறியதுதான். ஆனால், என்னால் முடிந்ததை கொண்டு வந்துள்ளேன்" என்றார்.

பெங்களூரில் சிஎஸ்கே

பெங்களூரில் சிஎஸ்கே

ரசிகர் கூட்டத்தில் அமர்ந்திருந்த பள்ளி மாணவி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொப்பியை அணிந்தபடி, டோணி என்று எழுதிய பதாகையை பிடித்திருந்தார். அவருக்கும் டோணிதான் மிகவும் பிடிக்குமாம். கோஹ்லி பிடிக்காது என்று சட்டென கூறுகிறார். வந்திருந்த ரசிகர்கள் அனைவருமே டோணியை பார்க்கவும், அவரின் ஆட்டத்தை ரசிக்கவுமே வந்திருந்தனர்.

டோணி அணி வெற்றி

டோணி அணி வெற்றி

ஆயினும், டோணி 24 பந்துகளில் 9 ரன்களில் அவுட்டானது அவர்களுக்கு ஏமாற்றமே. இருப்பினும், ஆட்டம் முடியும்வரை டோணி.. டோணி என கத்திக்கொண்டே இருந்தது ரசிகர் பட்டாளம். இறுதியில் 210 ரன்கள் எடுத்திருந்த ஜார்கண்ட், 5 ரன்கள் வித்தியாசத்தில் ஜம்மு காஷ்மீரை தோற்கடித்தது.

நாளை போட்டி

நாளை போட்டி

நாளை குஜராத் அணிக்கு எதிரான ஜார்கண்ட் போட்டியும் இதே இடத்தில் நடக்கிறது. அதற்கும் ரசிகர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, December 10, 2015, 17:54 [IST]
Other articles published on Dec 10, 2015
English summary
It's 7 AM on Thursday (December 10). Four fans are at the main gate of Aluru grounds. They are 2 hours early to watch their hero, after travelling over 40 kilometres from Bengaluru. The quartet is at the ground to witness MS Dhoni, who is featuring in Jharkhand side for their opening game against Jammu and Kashmir in Vijay Hazare Trophy one-day tournament.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X