தோனிக்கு ரெய்னாவின் வேற லெவல் வாழ்த்து.. முதல்வர் ஸ்டாலினின் ஆசை.. குவியும் பிறந்தநாள் வாழ்த்து

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று 41வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Happy Birthday Dhoni: மெர்சலான MSD-யின் Memorable International Innings | Aanee's Appeal | *Cricket

தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விராட் கோலி, தோனியை போன்ற ஒரு தலைவன் வேறு யாரும் இல்லை.

இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி செய்ததற்கு மனமார்ந்த நன்றிகள். தோனி என்னுடைய மூத்த சகோதரராகவே மாறிவிட்டார். அன்பும், மரியாதையும் எப்போதும் உண்டு என்று கூறியுள்ளார்.

முக்கியமான ஆட்டத்தை வேடிக்கை பார்த்தது வேதனை.. இது பேட்ட பாயுற நேரம்.. ரோகித் சர்மா தடாலடி பேச்சுமுக்கியமான ஆட்டத்தை வேடிக்கை பார்த்தது வேதனை.. இது பேட்ட பாயுற நேரம்.. ரோகித் சர்மா தடாலடி பேச்சு

சேவாக் பாராட்டு

சேவாக் பாராட்டு

கிரிக்கெட் விளையாடும் போது தோனிக்கும், சேவாக்கிற்கும் மோதல் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதனை சுக்கு நூறாக உடைத்தது போல் டிவீட் போட்டுள்ள சேவாக், ஒரு முற்றுப் புள்ளி இல்லாமல் வாக்கியம் முடிவு பெறாது. அதே போல் தான் தோனியும், ஆட்டமிழக்காத வரை போட்டியும் முடியாது என்று சேவாக் கூறியுள்ளார். தோனி போன்ற ஒரு நபர் கிடைக்க மற்ற அணிகளுக்கு கொடுத்து வைக்கவில்லை என்றும் சேவாக் பாராட்டினார்.

பெரிய அண்ணன்

பெரிய அண்ணன்

இதே போன்று, தோனிக்கும், ரெய்னாவுக்கும் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது சின்ன தல ரெய்னா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தோனியை தனது பெரிய அண்ணன் என்று குறிப்பிட்டுள்ளார். என் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் ஆதரவாளராகவும், ஆசிரியராகவும் இருந்துள்ளார். உங்களுக்கு இறைவன் நல்ல உடல் நலத்தை தர வேண்டுகிறேன் என்று ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.

ஜாம்பவான்கள்

ஜாம்பவான்கள்

கங்குலி போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்று கற்று கொடுத்தார். ஆனால் தோனி அதனை பழக்க வழக்கமாகவே மாற்றிவிட்டார். இந்திய கிரிக்கெட்டை வடிவமைத்த இரண்டு ஜாம்பவான்களும் ஒரு நாள் இடைவெளியில் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கெயிப் கூறியுள்ளார். மஹி பாய் தலைமையின் கீழ் விளையாடியது மிகவும் மறக்க முடியாத அனுபவம் என்று ரஹானே குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், தோனியின் ஈடு இணையற்ற சாதனைகள் எளிய கிராமப்புற இளைஞர்களின் கனவை அடைய நம்பிக்கை தரும். மீண்டும் சென்னை அணிக்காக நீங்கள் விளையாடுவதை எதிர்நோக்கி காத்துள்ளேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி என்று குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MS Dhoni birthday celebration- Birthday wishes pour from all fronts தோனிக்கு ரெய்னாவின் வேற லெவல் வாழ்த்து.. முதல்வர் ஸ்டாலினின் ஆசை.. குவியும் பிறந்தநாள் வாழ்த்து
Story first published: Thursday, July 7, 2022, 13:19 [IST]
Other articles published on Jul 7, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X