For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரவுண்டில் மட்டுமல்ல அந்தரத்தில் பறந்தும் அமர்க்களப்படுத்திய டோணி!

By Veera Kumar

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி முதல் முறையாக பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி விட்டதால் இப்போது அவருக்கு நிறைய ஓய்வு கிடைக்கிறது. இதையடுத்து ராணுவம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள டோணி, ஆக்ராவில் உள்ள பாராசூட் பயிற்சி பள்ளிக்கு கடந்த 5ம் தேதி வந்தார். தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு, உயர்மட்ட இந்திய ராணுவ பாராசூட் பிரிவு வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

MS Dhoni completes first para jump for Territorial Army

இந்நிலையில் ராணுவ வீரர்கள் உதவியுடன் முதல் முறையாக இன்று பாராசூட்டில் இருந்து கீழே குதித்தார்.

ஆக்ரா விமான தளத்தில் இருந்து இந்திய விமானத்தில் சென்ற அவர் 1,250 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து சாகசம் செய்தார். அவர் 70 வினாடிகளில் கீழே இறங்கினார்.

கேப்டன் டோனியை ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Story first published: Wednesday, August 19, 2015, 17:42 [IST]
Other articles published on Aug 19, 2015
English summary
Indian cricket captain Mahendra Singh Dhoni completed his first parachute jump from an Indian Air Force aircraft on Wednesday as part of his training with the Territorial Army.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X