For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs Aus: 9 வருடம் கழித்து ஏமாந்த தோனி..! 5வது முறையாக கோல்டன் டக்..!!

நாக்பூர்:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் தல தோனி கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். 9 ஆண்டுகள் கழித்து 5வது முறையாக கோல்டன் டக்காகி உள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டி20 தொடரை இந்தியா இழந்தது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல் ஒரு நாள் போட்டியை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2 வது ஒரு நாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.

வேற வழியில்லை.. தவான் - ரோஹித் சர்மாவை பிரிக்க வேண்டிய நேரம் வந்துருச்சு?! வேற வழியில்லை.. தவான் - ரோஹித் சர்மாவை பிரிக்க வேண்டிய நேரம் வந்துருச்சு?!

பேட்டிங் செய்த இந்தியா

பேட்டிங் செய்த இந்தியா

அதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 250 ரன்களை எடுத்தது.

சாதனை சதம்

சாதனை சதம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.கேப்டனாக,வீரராக பல சாதனைகளை அவர் இந்த ஆட்டத்தில் செய்திருக்கிறார்.

நேர்மாறான நிகழ்வுகள்

நேர்மாறான நிகழ்வுகள்

அதே நேரத்தில், அதற்கு நேர்மாறான சில சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே வீழ்ந்திருக்கிறார். வழக்கம் போல தவான் சோபிக்கவில்லை.

தோனியின் கோல்டன் டக்

தோனியின் கோல்டன் டக்

இதை எல்லாத்தையும் விட... தல தோனியின் டக் அவுட் தான் ரசிகர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது. இன்றைய போட்டி அவருக்கு 337வது ஒருநாள் போட்டி.

கேட்ச் முறையில் ஆட்டமிழப்பு

கேட்ச் முறையில் ஆட்டமிழப்பு

33வது ஓவரில் களமிறங்கிய அவர்.. தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து சோகத்துடன் வெளியேறினார். மைதானத்தில் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி.

2005ல் கோல்டன் டக்

2005ல் கோல்டன் டக்

அதன்பிறகு 2005ல் ஆண்டு அகமதாபாதில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கோல்டன் டக் ஆகி இருக்கிறார். பின்னர், 2 ஆண்டுகள் கழித்து 2007ம் ஆண்டில் அதே இலங்கைக்கு எதிரான போர்ட் ஆப் ஸ்பெயினில் விளையாடும் போது 3வது முறையாக கோல்டக் டக்.

2 முறை ஆஸி.யிடம் கோல்டன் டக்

2 முறை ஆஸி.யிடம் கோல்டன் டக்

2010ம் ஆண்டு இதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்திருக்கிறார். அதன் பிறகு அதே நாக்பூர் அணியுடன் இப்போது 5வது முறையாக கோல்டன் டக்காகி இருக்கிறார் தோனி.

9 ஆண்டுகளுக்கு பிறகு

9 ஆண்டுகளுக்கு பிறகு

அவரின் இந்த கோல்டன் டக் 9 ஆண்டுகள் கழித்து நடந்திருக்கிறது. அதுவும்... 5வது முறையாக கோல்டன் டக். எத்தனை முறை டக் அவுட்டாகி இருக்கிறார் என்று பார்த்தால் இது 10வது முறை.

2004ம் ஆண்டு போட்டி

2004ம் ஆண்டு போட்டி

அதனால் ரசிகர்கள் ஏமாந்திருந்தாலும்... தோனியின் புள்ளிவிவரத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உண்டு. 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி.. அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் போட்டியில் இறங்குகிறார்.

முதல் மேட்சில் கோல்டன் டக்

முதல் மேட்சில் கோல்டன் டக்

வங்கதேசத்துடனான இந்திய அணியில் இடம்பிடித்து அறிமுக வீரராக களம் இறங்கினார். அந்த முதல் போட்டியில் அவர் கோல்டன் டக்... அதன்பிறகு படிப்படியாக முன்னேறி, அணியின் கேப்டனாக வலம் வந்து உலக கோப்பையையும் பெற்று தந்தவர் என்று ரசிகர்களில் மற்றொரு தரப்பினர் சமாதானம் செய்து கொள்கின்றனர்.

Story first published: Tuesday, March 5, 2019, 18:52 [IST]
Other articles published on Mar 5, 2019
English summary
MS Dhoni falls for fifth golden duck in ODI career.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X