For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது வேற லெவல்.. குட்டிக் குழந்தையுடன் "சில்ட்ரன்ஸ் டே" கொண்டாடிய தோனி.. வைரல் வீடியோ!

Recommended Video

Dhoni feeding a child on Annaprashana | குழந்தையுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய தோனி

ராஞ்சி : கிரிக்கெட் ரசிகர்களின் ஆல் டைம் பேவரிட்டான இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, சமீப காலங்களில் தன்னுடைய ஆட்டங்களை குறைத்துக் கொண்டுள்ளார். ஆயினும் அவர் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கையாக உள்ளது.

அவ்வாறு குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தை ஒன்றுக்கு அவர் அன்னபிரசன்னம் செய்த நிகழ்வு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குழந்தையின் தாயின் சகோதரர் அதாவது குழந்தையின் மாமா இந்த நிகழ்வை செய்வது வழக்கம். ஆனால் தோனியிடம் இதை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை அவர் மகிழ்ச்சியுடன் செய்தார். இதனிடையே, இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள குழந்தையின் பெற்றோர், மிகுந்த பாக்கியமாக உணர்வதாக கூறியுள்ளனர்.

எதிரணியாக இருந்தாலும் பரவாயில்லை.. கூப்பிட்டு உதவிய ரோஹித் சர்மா.. நெகிழ்ந்து போன வங்கதேச ரசிகர்!எதிரணியாக இருந்தாலும் பரவாயில்லை.. கூப்பிட்டு உதவிய ரோஹித் சர்மா.. நெகிழ்ந்து போன வங்கதேச ரசிகர்!

முதல்முறை திட உணவு

முதல்முறை திட உணவு

குழந்தை பிறந்ததில் இருந்து அதற்கு தாய்ப்பால் உள்ளிட்ட திரவ உணவு கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு முதல் முறையாக திட உணவு கொடுப்பது அன்னபிரசன்னம் செய்தல் என்று கூறப்படுகிறது. வட இந்தியாவில் இந்த முறை அதிகமாக கடைபிடிக்கப்படுகிறது.

சமூகவலைதளத்தில் வைரலான வீடியோ

சமூகவலைதளத்தில் வைரலான வீடியோ

இந்நிலையில் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தை ஒன்றுக்கு மகேந்திர சிங் தோனி, அன்னபிரசன்னம் செய்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

உறவினர்கள் மகிழ்ச்சி

இந்த வீடியோவில் குழந்தை ஒன்றுக்கு மகேந்திர சிங் தோனி சோறூட்டினார். இதை சுற்றியிருந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

"அவள் தான் கூற வேண்டும்"

உணவின் சுவை எப்படி இருக்கிறது என்று தோனியிடம் சுற்றியிருந்தவர்கள் கேள்வி கேட்க, அதற்கு அவர், குழந்தையை தான் கேட்க வேண்டும் என்று கேலியுடன் பதிலளித்துள்ளார்.

குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி

குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி

இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள குழந்தையின் பெற்றோர். இதை பாக்கியமாக உணர்வதாகவும் கூறியுள்ளனர்.

ஓய்வு குறித்து வதந்திகள்

ஓய்வு குறித்து வதந்திகள்

தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு வதந்திகள் வெளிப்பட்ட வண்ணம் உள்ளது. ஆயினும் அதுகுறித்து அறிவிக்காத தோனி, சமீப காலங்களில் தன்னுடைய ஆட்டங்களை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற தொடரில் சமீபத்தில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 15, 2019, 16:38 [IST]
Other articles published on Nov 15, 2019
English summary
On Children's day, dhoni feed a baby on Annaprasanna
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X