For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னையில் தோனி.. முதல் அணியாய்.. அமீரகம் பறக்கும் சிஎஸ்கே - ஐபிஎல் கதகளி ஸ்டார்ட்ஸ்

சென்னை: ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு அமீரகம் கிளம்பவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கேப்டன் மகேந்திர சிங் தோனி இணைந்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக, பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 தொடர் மீண்டும், வரும் செப்.19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

62 ரன்களுக்கு ஆஸி., ஆல் அவுட்.. ஒரே வருடத்தில் அதிக தோல்வி.. அதலபாதாளத்தில் கங்காருக்களின் தேசம்62 ரன்களுக்கு ஆஸி., ஆல் அவுட்.. ஒரே வருடத்தில் அதிக தோல்வி.. அதலபாதாளத்தில் கங்காருக்களின் தேசம்

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மூலம் இத்தொடர் தொடங்குகிறது.

31 ஆட்டங்கள்

31 ஆட்டங்கள்

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி அக்டோபர் 15ம் தேதி நடக்கிறது. ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றுப் போட்டிகள் அக்.10, 11 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறுகிறது. துபாயில் 13 போட்டிகள், ஷார்ஜாவில் 10 போட்டிகள், அபுதாபியில் 8 போட்டிகள் என 31 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் 2 போட்டிகள் நடைபெறும் நாட்களில் ஒரு போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கும் மற்றொரு போட்டி இரவு 7.30 மணிக்கும் நடைபெறும். மற்றபடி இரவுப்போட்டிகள் அனைத்தும் 7.30 மணிக்கு நடைபெறும்.

சென்னை vs மும்பை

சென்னை vs மும்பை

தற்போதைய நிலவரப்படி டெல்லி கேப்பிடல்ஸ், கோலியின் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் டாப் 4 இடங்களில் உள்ளன. போட்டி அட்டவணை முழு விவரம்,

30 MI vs CSK 19 செப்டம்பர், 2021 7:30PM துபாய்

31 KKR vs RCB 20 செப்டம்பர், 2021 7:30PM அபுதாபி

32 Punjab Kings vs RR 21 செப்டம்பர், 2021 7:30PM துபாய்

33 DC vs SRH 22 செப்டம்பர், 2021 7:30PM துபாய்

34 MI vs KKR 23 செப்டம்பர், 2021 7:30PM அபுதாபி

35 RCB vs CSK 24 செப்டம்பர், 2021 7:30PM ஷார்ஜா

36 DC vs RR 25 செப்டம்பர், 2021 3:30PM அபுதாபி

37 SRH vs Punjab Kings 25 செப்டம்பர், 2021 7:30PM ஷார்ஜா

38 CSK vs KKR 26 செப்டம்பர், 2021 3:30PM அபுதாபி

39 RCB vs MI 26 செப்டம்பர், 2021 7:30PM துபாய்

40 SRH vs RR 27 செப்டம்பர், 2021 7:30PM துபாய்

41 KKR vs DC 28 செப்டம்பர், 2021 3:30PM ஷார்ஜா

42 MI vs Punjab Kings 28 செப்டம்பர், 2021 7:30PM அபுதாபி

43 RR vs RCB 29 செப்டம்பர், 2021 7:30PM துபாய்

44 SRH vs CSK 30 செப்டம்பர், 2021 7:30PM ஷார்ஜா

45 KKR vs Punjab Kings 1 அக்டோபர், 2021 7:30PM துபாய்

46 MI vs DC 2 அக்டோபர், 2021 3:30PM ஷார்ஜா

47 RR vs CSK 2 அக்டோபர், 2021 7:30PM அபுதாபி

48 RCB vs Punjab Kings 3 அக்டோபர், 2021 3:30PM ஷார்ஜா

49 KKR vs SRH 3 அக்டோபர், 2021 7:30PM துபாய்

50 DC vs CSK 4 அக்டோபர், 2021 7:30PM துபாய்

51 RR vs MI 5 அக்டோபர், 2021 7:30PM ஷார்ஜா

52 RCB vs SRH 6 அக்டோபர், 2021 7:30PM அபுதாபி

53 CSK vs Punjab Kings 7 அக்டோபர், 2021 3:30PM துபாய்

54 KKR vs RR 7 அக்டோபர், 2021 7:30PM ஷார்ஜா

55 SRH vs MI 8 அக்டோபர், 2021 3:30PM அபுதாபி

56 RCB vs DC 8 அக்டோபர், 2021 7:30PM துபாய்

57 தகுதி சுற்று 1 10 அக்டோபர், 2021 7:30PM துபாய்

58 எலிமினேட்டர் 11 அக்டோபர், 2021 7:30PM ஷார்ஜா

59 தகுதி சுற்று 2 13 அக்டோபர், 2021 7:30PM ஷார்ஜா

60 இறுதிப் போட்டி 15 அக்டோபர், 2021 7:30PM துபாய்

ஆகஸ்ட் 14 அல்லது 15

ஆகஸ்ட் 14 அல்லது 15

ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் இந்த சூழலில், அதற்கான ஏற்பாடுகளில் அணி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ஐபிஎல் அணிகள், ஆகஸ்ட் 10ம் தேதிக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று முன்னேற்பாடுகள், பயிற்சிகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியிருந்தது. இதுகுறித்து பேட்டி அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், "பிசிசிஐ ஆகஸ்ட் 10ம் தேதிக்கு மேல் அமீரகம் செல்ல அனுமதித்துள்ளது. எனவே ஆகஸ்ட் 14 அல்லது 15ம் தேதிகளில் சென்னை அணி அமீரகத்திற்கு புறப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது" என்று கூறியிருந்தார்.

அபார ஃபார்ம்

அபார ஃபார்ம்

இந்த நிலையில், அமீரகத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புறப்படவிருக்கும் நிலையில், கேப்டன் மகேந்திர சிங் தோனி (கேப்டன் தோனி-ன்னு எழுதி எவ்ளோ நாளாச்சு!!) அணியில் இணையும் பொருட்டு சென்னை வந்தடைந்துள்ளார். சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் ஜாலியாக டூர் சென்று வந்த புத்துணர்ச்சியுடன் தற்போது சென்னை வந்துள்ளார். இதன் மூலம், அவர் விரைவாகவே தனது பயிற்சியை தொடங்கவிருக்கிறார். மற்ற அணிகளுக்கு முன்பாகவே அமீரகம் புறப்படவுள்ள சென்னை அணி, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய தங்கள் அபார ஃபார்மை மீண்டும் மெயின்டெய்ன் செய்வதற்கான பயிற்சியை தொடங்க உள்ளது.

பயிற்சிக்கு தயார்

பயிற்சிக்கு தயார்

இதில், தோனியின் பங்கு மிக முக்கியமானது. கடந்த 2 ஆண்டுகளாகவே பெரிய ஹிட்ஸ், ஷாட்ஸ்களை அடிக்க தடுமாறி வருகிறார் தோனி. சரியான டைமிங்கில் அவரால் பந்துகளை க்ளியர் செய்ய முடியவில்லை. வருண் சக்கரவர்த்தில் ஓவரில் அவர் அவுட்டான விதத்தை பார்த்த போது, எந்த அளவுக்கு பேட்டிங்கில் ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார் என்பது தெரியும். அதையெல்லாம் கருத்தில் கொண்டு அவர் முன்பே பயிற்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, August 10, 2021, 13:31 [IST]
Other articles published on Aug 10, 2021
English summary
MS Dhoni has landed in Chennai IPL 2021 - மகேந்திர சிங் தோனி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X