For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி கொடுத்த சூப்பர் விருந்து... வீட்ல இருக்கற மாதிரியே உணர்ந்தேன்... தனஸ்ரீ நெகிழ்ச்சி

துபாய் : கடந்த வாரத்தில் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் மற்றும் தனஸ்ரீ வர்மாவிற்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் துபாயில் அவர்கள் இருவருக்கும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இரவு விருந்து அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் சஹல் மற்றும் தனஸ்ரீ புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். வீட்டில் இருப்பதை போலவே உணர வைத்ததாக தனஸ்ரீ நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்டில் நிச்சயதார்த்தம்

ஆகஸ்டில் நிச்சயதார்த்தம்

கடந்த வாரத்தில் இந்திய லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் மற்றும் நடன இயக்குநர் தனஸ்ரீ வர்மாவிற்கு திருமணம் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், சஹல் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக சில தினங்களில் யூஏஇ சென்றார்.

கடந்த வாரத்தில் திருமணம்

கடந்த வாரத்தில் திருமணம்

இதையடுத்து தனஸ்ரீயும் யூஏஇ பயணம் மேற்கொண்டு சஹல் பங்கேற்று விளையாடிய போட்டிகளில் அவரை பார்வையாளராக இருந்து உற்சாகப்படுத்தினார். குறைந்த ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுவிட்டு சஹல் நாடு திரும்பிய நிலையில் கடந்த வாரத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றது.

துபாயில் ஹனிமூன்

துபாயில் ஹனிமூன்

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் சஹல், தன்னுடைய திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் இன்ஸடாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அள்ளினார். இந்நிலையில் அவர் ஹனிமூனுக்காக துபாய் சென்றுள்ளார்.

சஹல், தனஸ்ரீ நெகிழ்ச்சி

அங்கு அவருக்கும் தனஸ்ரீக்கும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி இரவு உணவு அளித்தனர். இந்நிலையல் அவர்கள் நால்வரும் இருக்கும் புகைப்படங்களை சஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டனர்.

தனஸ்ரீ நன்றி

தனஸ்ரீ நன்றி

தனஸ்ரீ வர்மா தங்களுடைய விருந்தின் சில உணவுகளை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். மேலும் தான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த உணவுக்கு நன்றி தெரிவித்த அவர், வீட்டில் இருப்பதை போலவே தான் உணர்ந்ததாகவும் மகழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, December 29, 2020, 18:18 [IST]
Other articles published on Dec 29, 2020
English summary
Felt like Home -Dhanashree verma thanks for MS Dhoni's dinner
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X