For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணி எனக்கு அப்பா மாதிரி.. முகம்மது சமி உருக்கம்

கேப்டன் டோணி எனக்கு அப்பா போல. எனக்கும் அவருக்கும் இடையே தந்தை -மகன் உறவுதான் உள்ளது என்று வேகப் பந்து வீச்சாளர் முகம்மது சமி உருக்கமாக கூறியுள்ளார்.

டெல்லி: இந்திய ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 அணிகளின் கேப்டன் டோணி எனக்கு ஒரு தந்தை மாதிரி என்று உருகியுள்ளார் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் முகம்மது சமி. டோணி மீது தான் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் பிறந்தவரான சமி, பெங்கால் அணிக்காக ஆடி வருபவர். இந்திய அணியில் இடம் பெற்றிருப்பவர். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3வது போட்டியில் காயம் காரணமாக அணியில் இடம் பெற முடியாமல் போய் விட்டது.

இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுடன் தனது உறவு குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்துள்ளார் சமி. பேட்டியில் சமி கூறியதிலிருந்து...

வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு

வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு

இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது எனக்கு பெருமை தருகிறது. டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும்போது வீட்டில் இருப்பதைப் போன்றே உணர்வேன். இந்திய வீரர்களுடனான உறவு உணர்வுப் பூர்வமானது.

ஆங்கிலம் தெரியாவிட்டாலும்

ஆங்கிலம் தெரியாவிட்டாலும்

எனக்கு ஆங்கிலம் சரியாக பேச வராது. இதனால் ஆரம்பத்தில் தடுமாறினேன். ஆனால் வீரர்கள் அதைப் பொருட்படுத்தாமல் என்னை அப்படியே ஏற்றுக் கொண்டனர். தட்டிக் கொடுத்து ஊக்கம் தந்தனர்.

கை கால் உதறியது

கை கால் உதறியது

இந்திய அணியில் யார் அறிமுகமானாலும் டிரஸ்ஸிங் ரூமுக்கு வரும்போது வீரர்களுக்கு முன்பு பேச வேண்டும். என்னையும் அப்படிப் பேசச் சொன்னபோது எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பதட்டமாக இருந்தேன்.

சகஜமாக பழக வராது

சகஜமாக பழக வராது

நமது அணியின் பெரும்பாலான வீரர்கள் மிகவும் வெளிப்படையானவர்கள். சோஷியலாக பழகக் கூடியவர்கள். எனக்கு அப்படி இல்லை. கூச்ச சுபாவம் கொண்டவன். எனவே என்னால் பேச முடியவில்லை. ஆங்கிலத்தில் பேசத் தெரியாது, எனவே இந்தியில் பேசுகிறேன் என்று கூறி விட்டு சில வார்த்தைகள்தான் பேசினேன்.

அட எதுல பேசுனா என்னப்பா

அட எதுல பேசுனா என்னப்பா

ஆனால் வீரர்கள் எதில் பேசினால் என்ன தைரியமா பேசு என்று தட்டிக் கொடுத்தது இன்னும் நினைவில் உள்ளது. மறக்க முடியாத அனுபவம். என்னை அப்படியே அவர்கள் ஏற்றுக் கொண்டது ஆச்சரியமானது.

டோணி அப்பா

டோணி அப்பா

கேப்டன் டோணி குறித்துக் கேட்டால் என்ன சொல்வது.. எனக்கு அவர் அப்பா போல. ஒரு தந்தை - மகன் உறவு போன்றது எங்களுடைய உறவு. இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை என்றார் சமி.

காயங்களால் அவதி

காயங்களால் அவதி

சமி அடுத்தடுத்து காயம் ஏற்பட்டு அணியில் நிரந்தரமாக இடம் பெற முடியாமல் தவித்து வருகிறார். கடைசியாக அவர் ஒரு நாள் போட்டியில் ஆடியது 2015ல் சிட்னியில் நடந்த உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில்தான். அதில் இந்தியா தோல்வியுற்றது.

Story first published: Sunday, December 25, 2016, 16:17 [IST]
Other articles published on Dec 25, 2016
English summary
India's pace spearhead Mohammed Shami has deep respect for India's limited overs' skipper Mahendra Singh Dhoni. As per the UP-born Bengal pacer, who was ruled out of the Indian Test squad after sustaining injury in his right knee during the third Test against England at Visakhapatnam, said MS Dhoni is like a father figure to him.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X