For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரோட யாரையும் கம்பேர் பண்ணாதீங்க... அவர் வேற மாதிரி.. முன்னாள் கேப்டன் குறித்து ரோகித் விளக்கம்

மும்பை : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இருவரும் ஒரே மாதிரி கேப்டன்ஷிப்பை மேற்கொள்வதாகவும், அணி வீரர்களின் குறையை காது கொடுத்து கேட்பதாகவும் சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்தார்.

Recommended Video

Dhoni is one of a kind, Rohit Sharma on comparison

மேலும் அடுத்த எம்எஸ் தோனி என்றால் அது ரோகித் சர்மா தான் என்றும் சுரேஷ் ரெய்னா தனது ஒரு பேட்டியின்போது கூறியிருந்தார்.

இதுகுறித்த ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா, தோனி வேறு மாதிரி என்றும் அவருடன் யாரையும் கம்பேர் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

தோனியை கூட்டிக் கொண்டு.. தனியாக கிளம்ப திட்டம் போட்ட சிஎஸ்கே.. எல்லாமே வேஸ்ட்.. கசிந்த தகவல்!தோனியை கூட்டிக் கொண்டு.. தனியாக கிளம்ப திட்டம் போட்ட சிஎஸ்கே.. எல்லாமே வேஸ்ட்.. கசிந்த தகவல்!

சுரேஷ் ரெய்னா ஒப்பீடு

சுரேஷ் ரெய்னா ஒப்பீடு

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் குறைந்த ஓவர்கள் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் முறையே ஐபிஎல்லில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் மிகச்சிறந்த கேப்டன்கள் என்றும் அணியின் வீரர்களின் குறைகளை காது கொடுத்து கேட்டு நிவர்த்தி செய்வார்கள் என்றும் சுரேஷ் ரெய்னா நிகழ்ச்சி ஒன்றில் சில தினங்களுக்கு முன்பு புகழ்ந்திருந்தார்.

யாரையும் கம்பேர் செய்யக்கூடாது

யாரையும் கம்பேர் செய்யக்கூடாது

இந்நிலையில் இதுகுறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தோனி வேற மாதிரி என்றும் அவருடன் யாரையும் கம்பேர் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் கேள்வி -பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வலிமையும் பலவீனமும் இருக்கும் என்றும் வீடியோபதிவு மூலம் தெரிவித்துள்ளார்.

4 கோப்பைகளை வென்ற ரோகித்

4 கோப்பைகளை வென்ற ரோகித்

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக தோனி 3 முறை கோப்பைகளை கைப்பற்றியுள்ள நிலையில் ரோகித் சர்மா தான் கேப்டனாக உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 கோப்பைகளை கைப்பற்றியுள்ளார். மேலும் இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் கோப்பை, ஆசிய கோப்பை போன்றவற்றிலும் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்காக கோப்பையை வென்றுள்ளார் ரோகித் சர்மா.

சுரேஷ் ரெய்னா பாராட்டு

சுரேஷ் ரெய்னா பாராட்டு

இதுவரை 10 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் தலைமையேற்று அதில் முறையே 8 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டி20 போட்டிகளில் வெற்றி கொண்டுள்ளார் ரோகித் சர்மா. இந்நிலையில் ரோகித்துடன் ஆசிய கோப்பைக்காக தான் விளையாடியுள்ளதாகவும் தோனி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒரே மாதிரியான திறன் கொண்டவர்கள் என்றும் அணியில் அடுத்த தோனி ரோகித்தான் என்றும் சுரேஷ் ரெய்னா கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

Story first published: Tuesday, August 4, 2020, 20:21 [IST]
Other articles published on Aug 4, 2020
English summary
Every individual is different and has his strengths and weaknesses -Rohit Sharma
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X