For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்பவுமே என்னோட குட் புக்ல அவர் பேரு இருக்கும்... கேன் வில்லியம்சன் பாராட்டு யாருக்கு?

வெல்லிங்டன் : எப்போதும் தன்னுடைய மதிப்பிற்குரியவர் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனிதான் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

அவருடைய கேப்டன்ஷிப்பின் கீழ் தான் விளையாட மற்றும் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 6 மாத்திற்கு ஆட மாட்டார்..மொத்தமாக ஓரம்கட்டப்பட்ட மூத்த வீரர்.இந்திய டீமில் கோலோச்ச போகும் நடராஜன் 6 மாத்திற்கு ஆட மாட்டார்..மொத்தமாக ஓரம்கட்டப்பட்ட மூத்த வீரர்.இந்திய டீமில் கோலோச்ச போகும் நடராஜன்

மேலும் தோனியின் செயல்பாடுகளை தான் எப்போதுமே மதிப்பதாகவும் கேன் வில்லியம்சன் மேலும் கூறியுள்ளார்.

தோனி குறித்து பாராட்டு

தோனி குறித்து பாராட்டு

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது இரட்டை சதத்தை அடித்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். மேலும் இரண்டாவது டெஸ்டின்போது தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி விடுப்பில் சென்ற அவர், அடுத்த போட்டியிலேயே மீண்டும் அணியில் இணைந்தார்.

மகிழ்ச்சியை பகிர்ந்த வில்லியம்சன்

மகிழ்ச்சியை பகிர்ந்த வில்லியம்சன்

சமீபத்தில் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். ரசிகர்களும் அவருடைய இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து தற்போது பாகிஸ்தானுடன் இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி மோதவுள்ளது.

வில்லியம்சன் பாராட்டு

வில்லியம்சன் பாராட்டு

இந்நிலையில் எப்போதும் தன்னுடைய மதிப்பிற்குரியவர் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி என்று கேன் வில்லியம்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். தோனியின் கேப்டன்ஷிப்பின் கீழ் தான் விளையாட மற்றும் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

12 போட்டிகள்... 317 ரன்கள்

12 போட்டிகள்... 317 ரன்கள்

மேலும் தோனியின் தலைமை பண்புகள் மற்றும் செயல்பாடுகளை தான் எப்போதும் மதிப்பதாகவும் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 317 ரன்களை எடுத்துள்ளார்.

Story first published: Friday, December 25, 2020, 10:37 [IST]
Other articles published on Dec 25, 2020
English summary
I would have liked to play under MS Dhoni and learned a lot -Kane Williamson
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X