For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் நின்னு போச்சு.. கையில் பேட்டை எடு.. பேட்மிண்டன் ஆடு.. தோனி செம கலக்கல்

ராஞ்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கிரிக்கெட் பேட்டை கீழே போட்டு விட்டு பேட்மிண்டன் ராக்கெட்டை கையில் எடுத்து விட்டார்.

Recommended Video

Sakshi scolds Dhoni after he parks his bike at a wrong place

ஐபில் போட்டிகள் தள்ளிப் போடப்பட்டு விட்டன. ரத்தும் ஆகப் போகிறது. காரணம் கொரோனா. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் பல்வேறு விதமான மாற்று வேலைகளில் இறங்கி விட்டனர். நம்ம கேப்டன் தோனி ராஞ்சிக்குத் திரும்பி விட்டார்.

போனவர் சும்மா இல்லாமல் வேறு விளையாட்டில் இறங்கி விட்டார். அதுதான் பேட்மிண்டன். கிரிக்கெட் விளையாட முடியாமல் போனால் என்ன பேட்மிண்டன் இருக்கே என்று இறங்கி விட்டார் தோனி.

வீரர்கள் ரிட்டர்ன்

வீரர்கள் ரிட்டர்ன்

ஏப்ரல் 15ம் தேதிக்கு ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போடப்பட்டுள்ளன. அவை ரத்தாகலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் அணி வீரர்கள் எல்லாம் சொந்த ஊர்களில் செட்டிலாகி விட்டனர். சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எல்லோரும் தத்தமது ஊருக்குப் போய் விட்டனர்.

ராஞ்சி திரும்பினார் தோனி

இந்த நிலையில் ராஞ்சியில் தோனி பேட்மிண்டன் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் தோனி. அதில் ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச ஸ்டேடியத்தில் உள்ள பேட்மிண்டன் அரங்கில் தோனி விளையாடுவது போல உள்ளது. தோனி உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். எப்போதும் ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்பதில் கவனமுடன் இருப்பவர்.

பேட்மிண்டன் ஆடி பயிற்சி

ஐபிஎல் போட்டிகள் நடைபெறாவிட்டாலும் கூட உடம்பை ஃபிட் ஆக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் பேட்மிண்டனில் இறங்கி விட்டார். அதேபோல இன்ஸ்டாகிராமில் இன்னொரு வீடியோவைப் போட்டுள்ளார். அதில் அவர் தனது ரசிகர்கள் புடை சூழ பைக்கில் ஏறி சவாரி செய்வது போல உள்ளது. மேலும் அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொள்ளவும் செய்கின்றனர்.

ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா

ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா

இதற்கிடையே, ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா, ரத்தாகுமா என்ற பதைபதைப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதுமே ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். இது மாதிரியான திருவிழாவை அவர்கள் ஒருபோதும் மிஸ் செய்வதே இல்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா வந்து குறுக்கிட்டிருப்பதால் அனைவரும் கவலையுடன் உள்ளனர்.

Story first published: Tuesday, March 17, 2020, 11:25 [IST]
Other articles published on Mar 17, 2020
English summary
CSK captain MS Dhoni has returned to Ranchi and playing Badminton
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X