தோனிக்கு இந்தியாவில் மெழுகு சிலை.. கேலி, கிண்டலுக்கு ஆளான சிலை.. தோனியா ? ரன்பீர் கபூரா? - சிரிப்பலை

மைசூர் : பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு இந்தியாவில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி மெழுகு சிலை அருங்காட்சியத்தில் தோனியின் மெழுகு சிலை திறக்கப்பட்டது.

இந்த சிலை முன்பு ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தோனி போல் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன்..கடைசி வரை ஆட்டத்தில் பரபரப்பு..போராடி வென்ற தென்னாப்பிரிக்காதோனி போல் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன்..கடைசி வரை ஆட்டத்தில் பரபரப்பு..போராடி வென்ற தென்னாப்பிரிக்கா

ரசிகர்கள் கேலி ?

ரசிகர்கள் கேலி ?

பொதுவாக வெளிநாட்டில் வைக்கப்படும் மெழுகு சிலை அப்படியே நிஜ தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். உண்மையில் அந்த நட்சத்திரம் தான் இருக்கிறாரா? இல்லை அது பொய்யா என்று நம்மையே சந்தேகிக்க தோன்றும். ஆனால் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ள மெழுகு சிலை தற்போது கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

தோனியா ? ரன்பீர் கபூரா?

தோனியா ? ரன்பீர் கபூரா?

இது தோனி போல் இல்லை என்றும் ராக்ஸ்டார் ,பிரம்மஸ்திரா போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் போல் இந்த சிலை இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். மற்றும் சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயுப் மாலிக்கிற்கு இந்தியாவில் ஏன் சிலை அமைத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்டு கேலி செய்து வருகின்றனர்.

ஆதிபுருஷ் கிராபிக்ஸ்

ஆதிபுருஷ் கிராபிக்ஸ்

இதை போன்று மேலும் சிலர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி கடும் கேலிக்கு உண்டான ஆதிபுரூஷ் படத்தோடு இந்த சிலையை ஒப்பிட்டுள்ளனர். ஒரு கோடி ரூபாய் கொடுத்து எப்படி ஒரு மோசமான கிராபிக்ஸ் உடன் ஆதிபுரூஷ் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டதோ அதேபோன்று தோனியின் சிலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர் .

ரசிகர் தான் தோனி?

ரசிகர் தான் தோனி?

மற்றும் சிலர் தோனியின் மெழுகு சிலையை விட அந்தப் பக்கத்தில் நிற்கும் ரசிகர் தோனியின் சிறிய வயதில் இருப்பது போல் தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் தற்போது சமூக வலைத்தளத்தில் தோனியின் மெழுகு சிலை ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MS Dhoni wax statue vecame troll material in social network தோனிக்கு இந்தியாவில் மெழுகு சிலை.. கேலி, கிண்டலுக்கு ஆளான சிலை.. தோனியா ? ரன்பீர் கபூரா? - சிரிப்பலை
Story first published: Friday, October 7, 2022, 21:58 [IST]
Other articles published on Oct 7, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X