2021, 2022 ஐபிஎல்லயும் சிஎஸ்கேல எம்எஸ் தோனி விளையாடுவாரு... சிஇஓ உறுதி

சென்னை : சிஎஸ்கே அணியில் வரும் 2021 மற்றும் 2022 சீசன்களிலும் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி இடம்பெற்று விளையாடுவார் என்று அணியின் சிஇஓ காசி விஸ்வாதன் தெரிவித்துள்ளார்.

தோனியைப் பற்றி CSK வெளியிட்ட New update

அணியை பொறுத்தவரை கேப்டன் தோனி எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார் என்றும் அதனால் தாங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

யூஏஇக்கு வரும் 21ம் தேதி சிஎஸ்கே அணி வீரர்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். முன்னதாக 16ம் தேதி முதல் 20ம் தேதிவரை சென்னை சிதம்பரம் மைதானத்தில் தோனி உள்ளிட்ட 15 வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் பீல்டிங் கோச்சுக்கு கொரோனா வைரஸ்.. ஐபிஎல் அரங்கில் பெரும் பரபரப்பு!

20ம் தேதி வீரர்கள் பயணம்

20ம் தேதி வீரர்கள் பயணம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள நிலையில், அடுத்த மாதம் 19ம் தேதி யூஏஇயில் ஐபிஎல் போட்டிகள் துவங்கி நடைபெறவுள்ளன. இதையொட்டி 8 அணி வீரர்களும் வரும் 20ம் தேதியையொட்டி யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். சிஎஸ்கே அணியும் வரும் 21ம் தேதி தங்களது பயணத்தை துவக்கவுள்ளனர்.

சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்பு

சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்பு

முன்னதாக வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதிவரை சென்னை சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பயிற்சியில் கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் 15 பேர் பங்கேற்கவுள்ளனர். தற்போது ராஞ்சியில் உள்ள உள் மைதானத்தில் தன்னுடைய பயிற்சியை தோனி துவக்கியுள்ளார்.

பொறுப்பை உணர்ந்து செயலாற்றுவார்

பொறுப்பை உணர்ந்து செயலாற்றுவார்

இந்நிலையில், தோனியின் இந்த பயிற்சி குறித்து கேள்வியுற்றதாகவும், ஆனால் தாங்கள் அவர்குறித்து எப்போதும் கவலை கொண்டதில்லை என்றும் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தோனி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து தன்னையும் அணியையும் சிறப்பாக பார்த்துக் கொள்வார் என்றும் அவர் கூறினார்.

தோனி விளையாடுவார் -சிஎஸ்கே

தோனி விளையாடுவார் -சிஎஸ்கே

வரும் 2021 மற்றும் 2022 ஆகிய ஐபிஎல் சீசன்களிலும் சிஎஸ்கே அணியில் பங்கேற்று தோனி விளையாடுவார் என்றும் காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டு காலமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ள எம்எஸ் தோனி, தற்போது யூஏஇயில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவுள்ள நிலையில், அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் குறிப்பாக சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MS Dhoni will be a part of the CSK for the 2021 and 2022 editions of the IPL -CEO
Story first published: Wednesday, August 12, 2020, 14:59 [IST]
Other articles published on Aug 12, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X