For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வந்துருச்சு உலகக் கோப்பை.. "ஹேர் கட்" பண்ணு.. கொண்டாடு.. எதிரிகளைப் பந்தாடு.. இது டோணி ஸ்டைல்!

டெல்லி: சர்வதேச அளவில் புகழ் பெற்ற வீரர்களைப் போலவே அவர்களது ஹேர்ஸ்டைலும் கூட வெகுவாகப் பேசப்படும். அந்த வகையில் டோணியும் அவ்வப்போது தனது ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொள்வதை வழக்கமாகக வைத்துள்ளார்.

வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டிக்காக அவர் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் கலக்கலாம் எனத் தெரிகிறது.

டோணி இப்படி கெட்டப் சேஞ்ச் செய்வது புதிதல்ல. இதற்கு முன்பும் கூட அவர் பலமுறை கெட்டப்பை மாற்றி கலக்கியுள்ளார். அதை விட முக்கியமானது, டோணியை இந்த வெளியுலகுக்கு அடையாளம் காட்ட உதவியதே அவரது ஹேர்ஸ்டைல்தானே.

2013ல் கீரிப்புள்ளை!

2013ல் கீரிப்புள்ளை!

டோணி கடந்த 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு முன்பாக கீரிப்புள்ளை ஹேர்ஸ்டைலுக்கு மாறி அசத்தினார். நடுவில் முடியை விட்டு விட்டு இரண்டு பக்கமும் வழித்தெடு்ப்பதுதான் கீரிப்புள்ள ஸ்டைல்.. பார்க்க நல்லாத்தான் இருந்துச்சு.

மோஹாக் ஸ்டைல்

மோஹாக் ஸ்டைல்

அதேபோல ஐபிஎல் தொடர் ஒன்றில் மோஹாக் ஸ்டைலில் தனது முடியலங்காரத்தை செய்திருந்தார் டோணி. அதையும் ரசிகர்கள் கொண்டாடினர். டோணியோ, எதிரிகளைப் பந்தாடினார்.

ஆரம்பத்தில் சடை

ஆரம்பத்தில் சடை

டோணி விளையாட வந்த புதிதில் நீண்டு தொங்கிய முடியுடன் வித்தியாசமாக காணப்பட்டார். பார்க்கவே படு ரோக்காக காணப்பட்டது அந்த ஹேர் ஸ்டைல். ஆனால் கேப்டனாதுமே முதலில் அவர் செய்தது முடியை வெட்டித் தூக்கிப் போட்டதுதான்.

அப்றம் மொட்டை

அப்றம் மொட்டை

டோணி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் உலகக் கோப்பையை வென்றதும் டோணி மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்தி புதிய கெட்டப்புக்கு மாறியிருந்தார்.

அடுத்து கெட்டப்புக்கு ரெடி

அடுத்து கெட்டப்புக்கு ரெடி

இந்த நிலையில் தற்போது விரைவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டித் தொடரின்போது புதிய கெட்டப்புடன் டோணி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாத்துக்கும் காரணம் சப்னா

எல்லாத்துக்கும் காரணம் சப்னா

டோணிக்கு முன்பு ஹேர்ஸ்டைல் மாறக் காரணமாக இருந்த சப்னா பவ்னானிதான் இந்த முறையும் டோணியிடம் ஸ்டைலை மாற்றுமாறு கூறியுள்ளார். டோணியும் கூட, ஒரே மாதிரியான ஹேர்ஸ்டைலைப் பார்த்துப் போரடிப்பதாக தனது சகவீரர்கள் கூறுவதாக கூறியுள்ளார்.

அப்ப மாற்றம் கண்டிப்பா உண்டு.. மாற்றம் ஒன்றே மாறாதது.. மக்களுக்குத் தெரிந்தது.. மஹிக்குத் தெரியாமலா போகும்!

Story first published: Friday, February 5, 2016, 16:58 [IST]
Other articles published on Feb 5, 2016
English summary
Indian skipper Mahendra Singh Dhoni seems to be extremely excited about the upcoming T20 World Cup. Let’s hope this excitement leads India to victory.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X