"விராட் மனைவி அனுஷ்காவுக்கு டீ கொடுத்தது உண்மையா?" - முன்னாள் தலைவர் "பொளேர்" பதில்

மும்பை: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் போன்று வேறு எவரும் விமர்சனங்களை சந்தித்திருக்கமாட்டார்கள். அப்படி தான் சந்தித்த நெத்தியடி விமர்சனத்துக்கு இன்று அவர் பதில் அளித்துள்ளார்.

இந்திய அணியில் 2016 முதல் 2020 வரை தேர்வுக் குழுத் தலைவராக இருந்தவர் எம்.எஸ்.கே. பிரசாத். 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் சிங்கை தேர்வு செய்யாமல் புறக்கணித்தது தான் இவர் சந்தித்த முதல் சர்ச்சை.

WTC Final IND vs NZ: பரபரக்கும் ஃபைனல்.. மேட்ச் எத்தனை மணிக்கு? எந்த சேனலில் பார்க்கலாம்? WTC Final IND vs NZ: பரபரக்கும் ஃபைனல்.. மேட்ச் எத்தனை மணிக்கு? எந்த சேனலில் பார்க்கலாம்?

அதன் பிறகு, அத்தொடரில் இந்திய அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் சரண்டராக, முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் விமர்சனத்துக்கு ஆளானார்.

விஜய் ஷங்கர்

விஜய் ஷங்கர்

அதுமட்டுமின்றி, 2019 உலகக் கோப்பையில், அம்பதி ராயுடுவை புறக்கணித்து, விஜய் ஷங்கரை தேர்வு செய்து, அவருக்கு '3டி' வீரர் என்ற பட்டமும் கொடுத்தார். ஆனால், விஜய் ஷங்கரால், மினிமம் கியாரண்டி தாக்கத்தை கூட இந்திய அணியில் ஏற்படுத்த முடியாமல் போக, பெரும் சிக்கலை சந்தித்தார். அதேபோல், 2018-19 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அணித் தேர்வில் விமர்சிக்கப்பட்டார்.

அனுஷ்காவுக்கு டீ

அனுஷ்காவுக்கு டீ

குறிப்பாக முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பரூக் என்ஜினியர், "நாம் மிக்கி மவுஸ் தேர்வுக்குழுவை கொண்டிருக்கிறோம். விராட் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு டீ கொடுப்பதில் தான் அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள் என்று காட்டமாக விமர்சித்து இருந்தார். பரூக்கின் இந்த விமர்சனம், அப்போது பெரும் வைரலானது.

எங்கள் முயற்சி

எங்கள் முயற்சி

இந்நிலையில், ஈஎஸ்பிஎன் Cricinfoக்கு பேட்டி அளித்த பிரசாத் இவ்விவகாரம் குறித்து மனம் திறந்துள்ளார். அதில், "நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே, ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணிலேயே வைத்து வீழ்த்தியதை பற்றி இங்கு யாரும் பேச மாட்டார்கள். இது எங்களுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அணியின் நிர்வாகம் எங்கள் முயற்சிகளை அங்கீகரித்தது.

தேவையில்லாத மேட்டர்

தேவையில்லாத மேட்டர்

நிர்வாகம் எங்களை அங்கீகரிப்பது போதும். வெளியாட்கள் என்ன சொன்னாலும், நாங்கள் முடித்த பணிகள் குறித்து அணி நிர்வாகம் அறியும். அவர்களுக்கு எல்லாம் தெரியும்" என்று கூறியிருக்கிறார். மேலும், இந்திய அணியின் தேர்வாளர்கள் அனுஷ்காவுக்கு காபி கொடுத்தோம் என்பதெல்லாம் அவர் தேவையில்லாமல் பேசும் விஷயமாகும் என்று பதில் அளித்திருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
'Serving Tea' to Virat Kohli's Wife Anushka Sharma - அனுஷ்கா
Story first published: Monday, June 14, 2021, 16:48 [IST]
Other articles published on Jun 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X