For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பும்ராவை எப்படி தெரியுமா எடுத்தோம்? மனம் திறந்த தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்!

Recommended Video

பும்ரா இந்திய அணியில் இணைந்தது எப்படி ? மனம் திறந்த பிரசாத் | How to select Bumrah in test matches

டெல்லி : சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரீத் பும்ராவை தேர்ந்தெடுக்க தான் மற்றும் தனது தலைமையிலான குழு நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டதாக இந்திய தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் முதல்முறையாக விளையாடுவதற்கு முன்பாக பும்ராவை ரஞ்சி போட்டிகளில் விளையாட செய்து அதன்மூலம் அவரை சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்ததாக பிரசாத் கூறியுள்ளார்.

பும்ரா டெஸ்ட் போட்டிகளுக்கு சரியான தேர்வாக இருக்க மாட்டார் என்று அனைத்து தரப்பிலும் கூறப்பட்ட நிலையில், அவரை அதற்கு தேர்ந்தெடுத்ததாகவும் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்த மேட்ச்சிலும் ஜெயித்தால்.. வேற லெவலுக்கு போகலாம்.. சென்னையின் எஃப்சி அணிக்கு செம வாய்ப்பு!இந்த மேட்ச்சிலும் ஜெயித்தால்.. வேற லெவலுக்கு போகலாம்.. சென்னையின் எஃப்சி அணிக்கு செம வாய்ப்பு!

 பும்ரா தேர்வு குறித்து மனம்திறந்த பிரசாத்

பும்ரா தேர்வு குறித்து மனம்திறந்த பிரசாத்

இன்னும் சில வாரங்களில் தன்னுடைய பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள இந்திய தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத், டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரீத் பும்ராவின் தேர்வு குறித்து தற்போது மனம் திறந்துள்ளார்.

 பல முக்கிய முடிவுகள்

பல முக்கிய முடிவுகள்

கூடிய விரைவில் பணி ஓய்வு பெறவுள்ள எம்எஸ்கே பிரசாத் தன்னுடைய பணிக்காலத்தில் தன்னுடைய தலைமையிலான குழுவினர் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்று பும்ராவை டெஸ்ட் போட்டிகளுக்காக தேர்வு செய்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

 அனைத்து தரப்பினரும் கருத்து

அனைத்து தரப்பினரும் கருத்து

குறைந்த ஓவர்களை கொண்ட போட்டிகளில் மட்டுமே சிறந்து விளங்கிய ஜஸ்பிரீத் பும்ரா, சர்வதேச டெஸ்ட் போட்டிகளை விளையாட சரியாக இருக்க மாட்டார் என்றே அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்ததாகவும், ஆனால் அதை மீறி தங்களது குழு நீண்ட நடைமுறையில் அவரை தேர்ந்தெடுத்ததாகவும் பிரசாத் கூறியுள்ளார்.

 12 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகள்

12 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகள்

தன்னுடைய 11வது டெஸ்ட் போட்டியிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை பும்ராவிற்கு கிடைத்துள்ளது. அவர் தற்போது 12 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய சாதனையை தொடர்ந்து வருகிறார்.

 பும்ரா தேர்வு குறித்து பிரசாத்

பும்ரா தேர்வு குறித்து பிரசாத்

கடந்த 2018ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய பும்ரா, அதற்கு முன்னதாக, குறைந்த ஓவர் போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு ரஞ்சி போட்டிகளை விளையாட செய்து அதைக் கொண்டு அவரை டெஸ்ட் போட்டிகளுக்காக தேர்வு செய்ததாகவும் பிரசாத் தெரிவித்துள்ளார்.

 பும்ரா போலவே நடைமுறை

பும்ரா போலவே நடைமுறை

பும்ராவை போலவே டி20 போட்டிகளில் விளையாடிவந்த ஹர்திக் பாண்டியாவும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளை விளையாட சரிபட்டு வரமாட்டார் என்று அனைத்து தரப்பினரும் கூறிய நிலையில், அவரையும் டெஸ்ட் போட்டிகளுக்காக நீண்ட நடைமுறையில் தேர்வு செய்ததையும் பிரசாத் நினைவு கூர்ந்தார்.

Story first published: Thursday, November 28, 2019, 17:03 [IST]
Other articles published on Nov 28, 2019
English summary
How to select Bumrah in test matches - MSK Prasad opens up
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X