For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL Final: பரபரப்பான கடைசி பந்தில் விக்கெட்..! துல்லிய பந்துவீச்சு.. ஹீரோவான மலிங்கா..!!

Recommended Video

IPL 2019: Final: கடைசி பந்தில் விக்கெட்..! ஹீரோவான மலிங்கா- வீடியோ

ஹைதராபாத்:ஐபிஎல் 2019ம் ஆண்டு தொடரில் ஒரே பந்தில் மும்பை இந்தியன்சின் ஹீரோவாக மாறியிருக்கிறார் மலிங்கா.20வது ஓவரில் அவர் வீசிய கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்த, ஐபிஎல் சாம்பியன் கோப்பை மும்பையின் வசம் சென்றிருக்கிறது.

2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆக சிறந்த போட்டி என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது நேற்றைய இறுதிப்போட்டி. சென்னையும், மும்பையும் களம் கண்ட இந்த போட்டி, நடப்பாண்டில் மட்டுமல்ல.. ஐபிஎல் வரலாற்றின் மறக்க முடியாத போட்டியாக உருவெடுத்திருக்கிறது.

நேற்றைய இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து149 ரன்கள் எடுத்தது.150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது சென்னை.

IPL 2008 ஏலம்...!! அப்பவே தல தோனியின் ரேட் ரூ.10.5 கோடி...! இணையத்தை கலக்கும் வைரல் டுவீட்IPL 2008 ஏலம்...!! அப்பவே தல தோனியின் ரேட் ரூ.10.5 கோடி...! இணையத்தை கலக்கும் வைரல் டுவீட்

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

பரபரப்பான இந்த போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது மும்பை. ஐபிஎல்லில் சாம்பியனாவது இது மும்பைக்கு 4வது முறை. உற்சாக மிகுதியில் அந்த அணியும், ரசிகர்களும் இருக்கின்றனர்.

பரபரப்பான 20வது ஓவர்

பரபரப்பான 20வது ஓவர்

இந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தி, இறுதிக்கட்டத்தில் அணிக்கு கோப்பையை பெற்று தந்தவர் லசித் மலிங்கா. 20வது ஓவர் தான் நேற்றைய பைனலின் ஸ்டார் ஓவர். கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு தேவை 9 ரன்கள்.

மலிங்காவின் பந்துவீச்சு

மலிங்காவின் பந்துவீச்சு

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ரன்களை வாரி வழங்கிய மலிங்கா அந்த ஓவரை வீச வந்ததை பார்த்த சென்னை ரசிகர்கள் கோப்பை நமக்குதான் என்று நினைத்தனர். ஆனால் நடந்ததோ வேறு. அப்போது களத்தில் இருந்தது வாட்சனும், ஜடேஜாவும்.

3 பந்துகளில் 5 ரன்கள்

3 பந்துகளில் 5 ரன்கள்

என்ன நடக்குமோ என்று இரு அணி ரசிகர்களும் அரங்கத்தில் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தனர். சிலர் கண்களை மூடிக்கொண்டனர். முதல் 2 பந்துகளில் தலா 2 ரன்களும், 3வது பந்தில் 2 ரன்களும் கிடைத்தன. இப்போது 3 பந்துகள்.. எடுக்க வேண்டியது 5 ரன்கள்.

வாட்சன் அவுட்

வாட்சன் அவுட்

4வது பந்தை வீசுகிறார் மலிங்கா. அருமையான பார்மில் இருந்து 80 ரன்கள் குவித்திருந்த வாட்சன் அவுட்டாக சென்னை ரசிகர்கள் அழாத குறை. மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த சென்னையின் மற்ற வீரர்கள் கலங்கி போயினர்.

என்ன வாய்ப்புகள்?

என்ன வாய்ப்புகள்?

5வது பந்தில் 2 ரன்கள் கிடைத்தன. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை. அப்போது சென்னையிடம் 2 வாய்ப்புகள் இருந்தன. அதாவது அந்த பந்தை பவுண்டரியோ, சிக்சரோ அல்லது 2 ரன்கள் தேவையான அளவுக்கு அடிப்பது. 2வது வாய்ப்பு ஒரு ரன் எடுத்து ஆட்டத்தை முடிவை சூப்பர் ஓவரில் நிர்ணயித்து கொள்ளும் சந்தர்ப்பம்.

ஹீரோவான மலிங்கா

ஆனால்... மும்பைக்கோ ஒரேயொரு சந்தர்ப்பம் தான் இருந்தது. ரன் அடிக்க விடாமல் விக்கெட்டை எடுப்பது தான். அதை தான் கன கச்சிதமாக செய்து முடித்தார் மலிங்கா. பந்தை துல்லியமாக கணித்து விக்கெட்டை நோக்கி வீச, எல்டபிள்யூ முறையில் தாகூர் அவுட்டாக கோப்பை மும்பையின் கைகளுக்குச் சொந்தமானது. அந்த இடத்தில் தமது அனுபவத்தை பயன்படுத்தி வெற்றி கண்டார் மலிங்கா என்பதால் ஒரே பந்தில் ஹீரோவாகி விட்டார்.

Story first published: Monday, May 13, 2019, 11:33 [IST]
Other articles published on May 13, 2019
English summary
Mumbai bowler Malinga became hero after the won against csk in ipl final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X