For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரையும் கேட்காமல் களத்தில் குதித்த இளம் இந்திய வீரர்.. கோபத்தில் பிசிசிஐ.. விரைவில் நடவடிக்கை!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் பிசிசிஐ அனுமதி இல்லாமல் பயிற்சி செய்து சிக்கி உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையில் பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்ய அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில், ஷர்துல் தாக்குர் மற்றும் மூன்று கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மைன்ட் பிளாக்கு.. மனைவியுடன் செம ஆட்டம் போட்ட வார்னர்.. வைரல் டிக்டாக்.. 1.5 கோடி வியூஸ்!மைன்ட் பிளாக்கு.. மனைவியுடன் செம ஆட்டம் போட்ட வார்னர்.. வைரல் டிக்டாக்.. 1.5 கோடி வியூஸ்!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் நிலையும் இதுதான். அவர்கள் பிசிசிஐ கண்காணிப்பிலும் உள்ளனர்.

லாக்டவுன் விதிகள்

லாக்டவுன் விதிகள்

துவக்கத்தில் இந்தியாவில் லாக்டவுன் விதிகளின்படி விளையாட்டுப் பயிற்சிகள் செய்ய தடை இருந்தது. அதனால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீடுகளுக்குள் சிறிய அளவில் உடற்பயிற்சி மட்டுமே மேற்கொண்டு வந்தனர். முழு அளவில் பயிற்சி செய்ய முடியாத நிலை இருந்தது.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

மீண்டும் சில மாதங்கள் கழித்து கிரிக்கெட் போட்டிகளை துவக்க திட்டமிட்ட பிசிசிஐ வீரர்களை அதற்காக பல கட்டமாக தயார் செய்ய முடிவு செய்தது. சில மாதங்கள் கழிந்த பின்னரே மைதானத்தில் பயிற்சிகளை துவக்க திட்டமிட்டு இருந்தது.

பாதுகாப்பு அவசியம்

பாதுகாப்பு அவசியம்

இதற்கிடையே, நான்காவது லாக்டவுனின் போது விளையாட்டு வீரர்கள் மூடப்பட்ட இடங்களில் தனிப்பட்ட முறையில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனாலும், பிசிசிஐ வீரர்களை மைதானத்தில் பயிற்சி செய்ய அனுமதிக்கவில்லை. வீரர்களின் பாதுகாப்பு தான் அவசியம் என்பதில் உறுதியாக இருந்தது.

ஷர்துல் தாக்குர் பயிற்சி

ஷர்துல் தாக்குர் பயிற்சி

இந்த நிலையில், இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஷர்துல் தாக்குர் சில நாட்கள் முன்பு மகாராஷ்ட்ராவில் உள்ள தன் சொந்த மாவட்டமான பால்கர்-இல் மைதானத்திற்கு சென்று பயிற்சி மேற்கொண்டார். அது பெரிய செய்தியானது. அவரைத் தொடர்ந்து மற்ற கிரிக்கெட் வீரர்களும் பயிற்சி செய்யத் துவங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

பிசிசிஐ விரும்பவில்லை

பிசிசிஐ விரும்பவில்லை

இந்த நிலையில், பிசிசிஐ அனுமதி பெறாமல் தான் ஷர்துல் தாக்குர் பயிற்சி செய்துள்ளார் என்ற தகவல் வெளியானது. மேலும், பிசிசிஐ அவர் அனுமதியின்றி வெளியே சென்று பயிற்சிசெய்ததை விரும்பவில்லை என்ற தகவலும் கிடைத்தது.

மும்பை கிரிக்கெட் அமைப்பு

மும்பை கிரிக்கெட் அமைப்பு

தற்போது மும்பை வீரரான ஷர்துல் தாக்குரிடம் அவர் அனுமதியின்றி பயிற்சி மேற்கொண்டது பற்றி விளக்கம் கேட்டுள்ளது மும்பை கிரிக்கெட் அமைப்பு. அவருடன் மேலும் மூன்று வீரர்கள் மைதானங்களில் பயிற்சி செய்துள்ளனர்.

நடவடிக்கை

நடவடிக்கை

அனுமதியின்றி பயிற்சி செய்த நால்வர் மீதும் நடவடிக்கை எடுக்க மும்பை கிரிக்கெட் அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிசிசிஐ-யும் தனிப்பட்ட முறையில் ஷர்துல் தாக்குரிடம் விசாரணை செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, May 31, 2020, 18:04 [IST]
Other articles published on May 31, 2020
English summary
Mumbai cricket association to take action against Shardul Thakur for practicing outdoor without prior permission from the state board or BCCI amid Coronavirus pandemic.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X