For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னதான் ஆச்சு மும்பை கேப்டனுக்கு... இன்னைக்கும் அவரோட ஆட்டத்தை பார்க்க முடியாதா?

அபுதாபி : கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக கீரன் பொல்லார்ட் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை சிறப்பாக வழிநடத்தினார்.

இந்நிலையில் இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

7 போட்டிகளில் வெற்றி

7 போட்டிகளில் வெற்றி

ஐபிஎல்லில் சிறப்பான அணியாக இந்த சீசனில் வலம்வந்துக் கொண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். தொடர்ந்து சீசன் துவங்கியதில் இருந்து முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

கீரன் பொல்லார்ட் கேப்டன்

கீரன் பொல்லார்ட் கேப்டன்

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதிய போட்டியில் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் கீரன் பொல்லார்ட் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை சிறப்பாக வெற்றி பெற செய்தார்.

இன்றும் பொல்லார்ட் கேப்டன்

இன்றும் பொல்லார்ட் கேப்டன்

ரோகித் இன்னும் பூரணமாக குணமாகாத நிலையில், அபுதாபியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு பதிலாக கீரன் பொல்லார்டே இன்றைய போட்டியிலும் தலைமையேற்று அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரோகித் பங்கேற்பார்

ரோகித் பங்கேற்பார்

இந்நிலையில் வரும் புதன்கிழமை அபுதாபியில் நடைபெறவுள்ள ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலும் அவர் பங்கேற்கவுள்ள நிலையில், அவர் தனது உடல்நிலையை கூடிய விரைவில் சரிபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, October 25, 2020, 18:26 [IST]
Other articles published on Oct 25, 2020
English summary
It is learnt that the management is looking at the next game against RCB in Abu Dhabi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X