For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பை இந்தியன்ஸ் அணியின் பெயர் மாற்றம்.. ரசிகர்கள் அதிருப்தி.. அதே பெயரை வைத்திருக்கலாம்

மும்பை: ஐபிஎல் தொடரில் அதிக முறை வெற்றி, அதிக கோப்பைகளை வென்ற அணி எது என்றால், அது மும்பை இந்தியன்ஸ் அணி தான்.

சென்னையும், மும்பையும் மோதினால், அந்தப் போட்டியை சூரியனே கொஞ்சம் ஓய்வு எடுத்து கொண்டு தான் பார்க்கும் . ( ஏன் என்றால் போட்டி இரவு தானே நடைபெறும்)

அந்த அளவுக்கு இரு அணிகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் என்று கடந்த 2008ஆம் ஆண்டு வைக்கப்பட்ட பெயருக்கு பின்னால் ஒரு பெரிய காரணமே உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

பெயர் காரணம்

பெயர் காரணம்

15 ஆண்டுகளுக்கு முன்பு, மராட்டியர்கள் மட்டும் தான் மும்பை சொந்தம் என்று சிவசேனாவின் பால்தாக்கரே கூறி இருந்தார். ஆனால், இதை பொருத்து கொள்ள முடியாத முகேஷ் அம்பானி, மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தம் என்று கருத்து கூற, இதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது.

நீல நிற ஜெர்சி

நீல நிற ஜெர்சி

அப்போது தான் ஐபிஎல் தொடர் உருவாக்கப்பட்டது. அப்போது மும்பை அணியை உடனே வாங்கிய முகேஷ் அம்பானி அதற்கு மும்பை இந்தியன்ஸ் என்று பெயர் வைத்தார். மும்பைக்கும், இந்தியாவுக்கும் இருக்கும் இணைப்பை உறுதிப்படுத்தும் விதமாக இந்த பெயர் பார்க்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி பயன்படுத்தும், அதே நீல நிற ஜெர்சியை மும்பையும் தேர்வு செய்தது.

Recommended Video

IPL, BBL பாணியில் CSA T20 League! லாபத்தில் Franchise Auction | Aanee's Appeal | *Cricket
புதிய அணிகள்

புதிய அணிகள்

இதுவரை மும்பை அணியும், சென்னை அணியும் தான் ஜெர்சியின் நிறத்தை மாற்றவில்லை. தற்போது ஐபிஎல் அணிகள், மற்ற நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் தொடரில் விளையாட போகும் அணியை வாங்கி வருகிறது. இதில் மும்பை அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் லீக் தொடரில் ஒரு அணியையும், தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 தொடரில் ஒரு அணியையும் வாங்கியது. இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் என்ன பெயர் வைக்க உள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது.

பெயர் மாற்றம்

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள அதிகார அறிவிப்பில், யுஏஇ வில் உள்ள அணியை எம்.ஐ, எமிரேட்ஸ் என்றும், கேப் டவுன் அணியை எம்.ஐ. கேப் டவுன் என்றும் மாற்றியுள்ளது.இந்தியன்ஸ் என்ற பெயரை எடுத்துவிட்டு எமிரேட்ஸ் என்ற பெயரை ஏன் வைத்தீர்கள் என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

Story first published: Thursday, August 11, 2022, 19:51 [IST]
Other articles published on Aug 11, 2022
English summary
Mumbai Indians changed their new team names in different Leagues மும்பை இந்தியன்ஸ் அணியின் பெயர் மாற்றம்.. ரசிகர்கள் அதிருப்தி.. அதே பெயரை வைத்திருக்கலாம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X