For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூணாவது கோப்பைக்கு அடிபோடும் நடப்பு சாம்பியன்... புள்ளிகள் பட்டியல்ல முதலிடத்த புடிச்சுருக்காங்க!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 9வது போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி எஸ்ஆர்எச்சிற்கு எதிராக மோதி வெற்றி பெற்றுள்ளது.

எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை 13 ரன்களில் எஸ்ஆர்எச் தோற்றுள்ளது.

புது பசங்கள மிடில் ஆர்டர்ல போட்டுருக்கீங்களே... வெற்றிக்கு இது சரியானதா? மஞ்ச்ரேகர் கேள்வி புது பசங்கள மிடில் ஆர்டர்ல போட்டுருக்கீங்களே... வெற்றிக்கு இது சரியானதா? மஞ்ச்ரேகர் கேள்வி

இந்த சீசனில் தனது ஹாட்ரிக் வெற்றிக்கான பயணத்தை தொடர்ந்து வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

9வது போட்டி

9வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 9வது போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடந்துள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய நிலையில், போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அபாரம்

மும்பை இந்தியன்ஸ் அபாரம்

இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக மோதி அதில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் முன்னிலை

புள்ளிகள் பட்டியலில் முன்னிலை

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மோதி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 3க்கு 2ல் வெற்றி என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும் ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

ஆர்சிபி, சிஎஸ்கே இடம்பிடிப்பு

ஆர்சிபி, சிஎஸ்கே இடம்பிடிப்பு

இந்த பட்டியலில் ஆர்சிபி 2க்கு 2 வெற்றியும் சிஎஸ்கே 2க்கு 1 வெற்றியும் பெற்று 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன. டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ளன. நேற்றைய போட்டியில் தோல்வியுற்ற எஸ்ஆர்எச் 3க்கு 0 என்ற கணக்கில் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.

நிதீஷ் ராணா முதலிடம்

நிதீஷ் ராணா முதலிடம்

இந்த பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6வது இடத்தில் இருந்தாலும் அந்த அணியின் நிதீஷ் ராணா ஆரஞ்ச் கேப்பிற்கான ஓட்டத்தில் 137 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டு போட்டிகளில் அவர் இரண்டு அரைசதங்களை அடித்துள்ளார். இதனிடையே ஆர்சிபி ஆல்-ரவுண்டர் ஹர்ஷல் படேல் 7 விக்கெட்டுகளுடன் பர்ப்பிள் கேப்பிற்கான ஓட்டத்தில் முதலிடத்தில் உள்ளார்.

Story first published: Sunday, April 18, 2021, 12:31 [IST]
Other articles published on Apr 18, 2021
English summary
RCB all-rounder Harshal Patel with 7 wickets in two matches continues to don the coveted IPL 2021 Purple Cap
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X