அப்படிபோடு.. மும்பை அணியுடன் இணைந்த இந்திய லெஜெண்ட்.. அப்போ இன்னிக்கு ஒரு செம சம்பவம் இருக்கு மக்கா

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அணியினருடன் இணைந்துள்ளார். கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.

இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், சென்னை அணியும் மோதுகின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் முன்னிலையில் போட்டிகளில் நடைபெறுவதால் இனி நடக்கும் 31 ஆட்டமும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கின்றன.

இன்று முதல் ஐ.பி.எல் திருவிழா: கோதாவில் குதிக்கும் சென்னை-மும்பை.. பலம், பலவீனம் என்ன? முழு அலசல்!இன்று முதல் ஐ.பி.எல் திருவிழா: கோதாவில் குதிக்கும் சென்னை-மும்பை.. பலம், பலவீனம் என்ன? முழு அலசல்!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் எப்படியோ அதுபோல்தான் ஐ.பி.எல்.லில் சென்னை-மும்பை அணியின் ஆட்டமும்.

சென்னை-மும்பை கோதா

சென்னை-மும்பை கோதா

இந்த பக்கம் சென்னையில் கேப்டன் மிஸ்டர் கூல் தோனி, அந்த பக்கம் ஹிட்மேன் ரோகித் சர்மா என்று இரண்டு பக்கமும் தரமான கேப்டன்கள் இருக்கின்றனர். இதேபோல் இரண்டு பக்கமும் வெறி கொண்டு விளையாடக்கூடிய வீரர்கள் பட்டாளம் நிரம்பி இருக்கிறது. சென்னையில் ஜடேஜா, பிராவோ, மொயீன் அலி என்றால் மும்பையில் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் என்று அதிரடி சூரர்கள் இருக்கின்றனர். சென்னையின் மஞ்சள் படையில் லிங்கி நிகிடி, தீபக் சாகர், என்று பந்துவீச்சில் மிரட்ட காத்திருக்க, அந்த பக்கம் மும்பையில் பும்ரா, போல்ட் மிரட்ட காத்திருக்கின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

இது தவிர மும்பை அணிக்கு மிகப்பெரும் பலம் எதுவென்றால் அந்த அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆலோசகராக இருப்பதுதான் ஒரு காலத்தில் தொடக்க காலத்தில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த சச்சின், ஓய்வு பெற்ற பிறகு 2013-ம் ஆண்டு முதல் மும்பை அணியின் பயிற்சியாளர், ஆலோசகர் என்று பதவி வகித்து வருகிறார். எப்போதும் ஐ.பி.எல்.லில் வலுவாக இருக்கும் மும்பை அணி சச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிறகு மேலும் வலுவாக மாறி விட்டது.

மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்

மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்

இந்த நிலையில் மும்பை அணி வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் அணியினருடன் இணைந்துள்ளார். இந்தியாவில் இருந்து துபாய்க்கு பறந்து வந்த சச்சின் டெண்டுல்கர், கொரோனா விதிமுறையான தனிமைபடுத்துதலை முடித்துக் கொண்டு, பயிற்சி மேற்கொள்ளும் அணி வீரர்களுக்கு, ஆலோசனை வழங்கினார். சச்சின் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ' ஆலோசகர், ஐகான், லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் வீரர்களின் பயிற்சி முகாமுக்கு வந்து விட்டார்'' என்று கூறியுள்ளது.

அனுபவம்

அனுபவம்

கடந்த 2020-ம் ஆண்டு துபாயில் ஐ.பி.எல் போட்டிகள் நடந்தபோது சச்சின் அணியுடன் இணையவில்லை. ஆனால் இந்த ஆண்டு முதலிலேயே அணியில் இணைந்துள்ள சச்சினின் அனுபவம், திறமை மற்றும் பொறுமை ஆகியவை வீரர்களுக்கு உதவியாக இருக்கும். ''இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இணைந்து கொண்டதை மகிழ்ச்சியுடன் கூறிய சச்சின் டெண்டுல்கர், மும்பை அணியின் ஜெர்சியை அணிவதில் பெருமை கொள்கிறேன் என்று டுவிட்டரில் பதிவிட்டார்.

ரசிகர்கள் மல்லுக்கட்டு

ரசிகர்கள் மல்லுக்கட்டு

மும்பை-சென்னை அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோத உள்ள நிலையில் இரு அணிகளின் ரசிகர்களின் மத்தியில் இப்போதே ஆட்டம் சூடுபறக்க தொடங்கி விட்டது. கூல் கேப்டன் தோனிதான் பெஸ்ட் என்று சென்னை ரசிகர்கள், ஹிட் மேட் ரோகித்தான் எல்லாமே என்று மும்பை பட்டாளங்களும் டுவிட்டரில் மல்லுக்கட்ட தொடங்கி விட்டன. ஆக மொத்தத்தில் இன்று இரவு நமக்கு செம விருந்து காத்திருக்கு.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mumbai Indians consultant Sachin Tendulkar has joined the team. The IPL cricket match, which was halted due to Corona, starts today in the United Arab Emirates
Story first published: Sunday, September 19, 2021, 12:12 [IST]
Other articles published on Sep 19, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X