For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு பவுண்டரியை தடுக்க ரிஸ்க் எடுத்து தாவி விழுந்த பொல்லார்டு.. ரசிகர்கள் பதைபதைப்பு.. வைரல் வீடியோ

மும்பை:ஒரு பவுண்ட்ரியை தடுக்க முயற்சித்த பொல்லார்டு, எதிர்பாராத விதமாக பவுண்டரி லைனுக்கு வெளியே தாவி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 51 -வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர் வார்னர் உலக கோப்பை பயிற்சிக்காக நாடு திரும்பிவிட்டார். அதனால் அவருக்கு பதிலாக நியூசி. வீரர் மார்டின் குப்தில் சேர்க்கப்பட்டார்.

போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக் காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர்.ரோகித் ஷர்மா 24 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த டி காக் அதிரடியாக ஆட ஆரம்பித்தார்.

ஸாரிங்க.. அப்ப நான் ஸாரிங்க.. அப்ப நான் "ஸ்வீட் 16" கிடையாது.. 19 வயசுப் பையன்.. பொய் சொன்னதை ஒத்துக்கிட்ட அப்ரிடி!

69 ரன் குவிப்பு

69 ரன் குவிப்பு

பின்னர் சூர்யகுமார் யாதவ் 23 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. பொறுப்பற்ற முறையில் விளையாடி, தொடர்ந்து அவுட்டாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை மும்பை குவித்தது. அதிகபட்சமாக டி காக் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பந்தை விளாசிய சாஹா

பந்தை விளாசிய சாஹா

தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சாகா மற்றும் மார்டின் குப்தில் களமிறங்கினர். அப்போது சாஹா அடித்த பந்து ஒன்று பவுண்டரியை நோக்கி சென்றது. அதை தடுப்பதற்காக பொல்லார்டு அதிவேகமாக ஓடினார். மின்னல் வேகத்தில் பந்தை தடுக்க முயற்சி செய்தார். பொல்லார்டு ஓடி வந்த வேகத்தை பார்க்கும் போது.. நிச்சயம் அவர் அந்த பந்தை தடுத்து விடுவார் என்று ரசிகர்கள் கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

தாவி விழுந்த பொல்லார்டு

ஆனால் நடந்ததோ வேறு. எல்லைக்கோட்டின் அருகில் சென்ற பந்தை அவர் காலால் லேசாக தட்டிவிட்டார். மேலும், எல்லைக்கோட்டை தாண்டிய போது வந்த வேகத்தில் நிற்கமுடியாமல்.. அங்கிருந்த விளம்பர பேனர்களில் மோதி அப்படியே அந்த பக்கம் தாவி விழுந்து அதிர்ச்சியளித்தார். தாம் கீழே விழுந்ததை பற்றி கவலைப்படாமல், அவர் தடுத்த பந்து பவுண்டரிக்கு போகவில்லை தானே என்று சக வீரரிடம் கேட்டார்.

இணையத்தில் வீடியோ

இணையத்தில் வீடியோ

ஆனால்... அந்த பந்து பவுண்டரிக்கு சென்றுவிட்டது என்பதை அறிந்து சில விநாடிகள் சோகமானார். தாவி வந்து நிற்க முடியாமல் பொல்லார்டு விழுந்த வேகத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்... பதைபதைப்புடன் தங்கள் இருக்கைகளில் இருந்து ஓடி வந்து பார்த்தனர். நல்வாய்ப்பாக பொல்லார்டுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. பந்தை பவுண்ட்ரிக்கு செல்லவிடமால் தடுக்க முயற்சி செய்து, எதிர்பாராத விதமாக லைனுக்கு வெளியே விழுந்த பொல்லார்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Friday, May 3, 2019, 13:17 [IST]
Other articles published on May 3, 2019
English summary
Mumbai Indians player Pollard tried to save a boundary and slipped down, fans shocked.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X