For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் உலகம் மறந்த அந்த 3 முக்கிய வீரர்கள்.. போதிய வாய்ப்பின்றி ஒதுக்கப்பட்டதால் ஏமாற்றம்

ஹைதராபாத்: ஐபிஎல் சீசனில் குறைந்த வாய்ப்புகளையே பெற்ற அதிர்ஷ்டம் இல்லாத 3 வீரர்களாக முரளி விஜய், குப்தில், யுவராஜ் சிங் ஆகியோர் கருதப் படுகின்றனர்.

ஐபிஎல் தொடர் இந்தியாவில் புகழ்பெற்ற ஒன்று. வெளிநாடுகளிலும் ஆர்வத்துடன் இந்த தொடரை ரசிர்கள் பார்ப்பதுண்டு. அண்மையில் தான் ஐபிஎல் தொடர் முடிவடைந்தது. சென்னையை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ்.

இந்த தொடரில் 8 அணிகளிலும் உள்ள அபாரமான, தரமான வீரர்கள் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவர். மற்றவர்கள் வெளியில் உட்கார வைக்கப்படுவர். ஆனால். நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் திறமையான பல வீரர்கள் அணியில் இடம்பெற்று சில வீரர்கள் ஓரங்கட்டப் பட்டனர்.

ரத்தம் வழிய, வழிய களத்தில் போராட்டம்...! சென்னை வீரரின் அர்ப்பணிப்பை பாராட்டும் ரசிகர்கள்

3 வீரர்கள்

3 வீரர்கள்

அதுபோல திறமை இருந்தும் குறைந்த வாய்ப்புகளே அளிக்கப்பட்டதாக 3 முக்கிய, சிறந்த வீரர்களை ரசிகர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். முரளி விஜய், மார்ட்டின் குப்தில் மற்றும் அதிரடி வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் அந்த 3 பேர்.

களத்தில் தடுமாற்றம்

களத்தில் தடுமாற்றம்

இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக அறியப்பட்டவர் முரளி விஜய். சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் தமது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளாமல் தடுமாறினார். கடந்தாண்டு சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, நடப்பு ஆண்டிலும் தக்கவைக்கப்பட்டார்.

 2 போட்டிகளில் வாய்ப்பு

2 போட்டிகளில் வாய்ப்பு

ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் டுபிளசிஸ் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். ஆகையால், 11 பேர் கொண்ட அணியில் முரளி விஜய்க்கு இடம் பெறவில்லை. வெறும் 2 போட்டிகளில் தான் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

முடியாமல் தவிப்பு

முடியாமல் தவிப்பு

அந்த போட்டிகளில் அவர் 4 ரன்களை குவித்து இருந்தார். 35 வயதான இவருக்கு போதிய ஆட்டங்களில் ஆடும் லெவனில் இடம் அளிக்கவில்லை. ஆதலால் தமது திறமையை மீண்டும் நிரூபிக்க முடியாமல் தவித்தார்.

தொடக்க ஆட்டக்காரர்

தொடக்க ஆட்டக்காரர்

மிக வெற்றிகரமான தொடக்க ஆட்டக்காரர்களை கொண்ட அணி என்றால் சன் ரைசர்ஸ். வார்னர், பெயர்ஸ்டோ ஆகியோர் சொந்த நாடுகளுக்கு திரும்பும்வரை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்பட்டனர். அதனால், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் குப்தில் கழற்றி விடப்பட்டார்.

ஸ்டிரைக் ரேட் அதிகம்

ஸ்டிரைக் ரேட் அதிகம்

வார்னரும், பெயர்ஸ்டோவின் விலகலுக்கு பின்னரே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் வெறும் 3 போட்டிகள் தான். அவற்றில் 81 ரன்களை 150 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்தார். முழு திறமையை வெளிக்கொணர அவருக்கு பல போட்டிகளில் வாய்ப்பளித்திருக்கலாம்.

யுவராஜ் அரைசதம்

யுவராஜ் அரைசதம்

20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த, அதிரடி வீரர் யுவராஜ் சிங். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. மும்பை அணியின் முதல் போட்டியில் களம் இறக்கப்பட்டார். டெல்லி அணிக்கு எதிரான அந்த போட்டியில் அரைசதம் அடித்தார்.

சொதப்பல் காரணம்

சொதப்பல் காரணம்

அதன் பின்னர், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்டார். பிறகு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். 37 வயதான இவர், 4 போட்டிகளில் களமிறக்கப்பட்டு 98 ரன்களை எடுத்திருக்கிறார். ரன் எடுக்க ஓடுவதில் சிரமம், சொதப்பல் பீல்டிங் ஆகியவையே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Story first published: Tuesday, May 14, 2019, 13:10 [IST]
Other articles published on May 14, 2019
English summary
Murali vijay, martin guptill, yuvraj singh misses most of the ipl matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X