For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்களுக்காக கடைசி காலம் வரை உழைத்தார்.. முருகன் அஸ்வின் செய்த உருக்கமான போஸ்ட்.. இப்படி ஒரு கதையா!

சென்னை: தமிழக வீரர் முருகன் அஸ்வின் சையது முஷ்டாக் அலி கோப்பையை தனது அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் முருகன் அஸ்வின் உருக்கமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி சாம்பியன் ஆகியுள்ளது. மிகவும் பரபரப்பாக சென்ற இறுதிப்போட்டியில் பரோட்டாவை வீழ்த்தி தமிழக அணி வென்றுள்ளது.

பிட்னஸ் பயிற்சியில தேறியாச்சு... டீமோட இணையவிருக்கும் கேஎல் ராகுல்... மிகச்சிறப்பு! பிட்னஸ் பயிற்சியில தேறியாச்சு... டீமோட இணையவிருக்கும் கேஎல் ராகுல்... மிகச்சிறப்பு!

தமிழக அணிக்கு இது இரண்டாவது சையது முஷ்டாக் கோப்பை வெற்றியாகும். 2007ல் முதல்முறை தமிழக அணி இந்த கோப்பையை வென்றது

என்ன

என்ன

இந்த தொடரில் தமிழக அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஸ்பின் பவுலர் முருகன் அஸ்வின் இருந்தார். ஐபிஎல் போட்டிகளில் ஆடிய அனுபவத்தை வைத்து தமிழக அணிக்கு இவர் வெற்றி தேடித்தந்தார். இந்த நிலையில் தமிழக வீரர் முருகன் அஸ்வின் சையது முஷ்டாக் அலி கோப்பையை தனது அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.

அம்மா

அம்மா

இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் முருகன் அஸ்வின் உருக்கமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன் என் அம்மா இறந்துவிட்டார். Acute Myeloid Leukemia நோய் குறைப்பாட்டால் என் அம்மா இறந்துவிட்டார். என்ன அம்மாவிற்கு கிரிக்கெட் என்றால் அவ்வளவு பிடிக்கும்.

 உருக்கம்

உருக்கம்

என் அம்மாவால்தான் நான் கிரிக்கெட் விளையாடவே தொடங்கினேன். எனக்கு நிறைய கிரிக்கெட் பால், டென்னிஸ் பால், ரப்பர் பந்துகளை என் அம்மாதான் குழந்தையாக இருக்கும் போது வாங்கி வருவார். எனக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்படுத்தியது என் அம்மாதான்.

கண்ணீர்

கண்ணீர்

என்னுடைய கிரிக்கெட்டை முன்னேற்றுவதில் என் அம்மா அதிக நேரம் செலவிட்டார். என்னை தினமும் மைதானத்திற்கு அவர்தான் பயிற்சிக்கு அழைத்து செல்வார். ஓய்வு நாட்களில் அருகில் இருந்து அவர் நான் மேட்ச் ஆடுவதை பார்ப்பார்.

கிரிக்கெட் பயிற்சி

கிரிக்கெட் பயிற்சி

கிரிக்கெட் ஆட வேண்டும் என்று பள்ளியில் எனக்காக பர்மிஷன் எல்லாம் கேட்டு இருக்கிறார். காலை நான்கு மணிக்கு எழுந்து. எங்களுக்கு உணவு சமைத்துவிட்டு, பின் 7 மணிக்கு அலுவலகம் சென்று, பின் 7 மணிக்கு மீண்டும் திரும்பி எங்களுக்கு உணவு சமைப்பார்.

தினமும் ஆட வேண்டும்

தினமும் ஆட வேண்டும்

தினமும் ஒருநாள் தவறாமல் எங்களுக்காக என் அம்மா உதவினார். அவர்தான் கிரிக்கெட்டில் என்னுடைய நம்பர் 1 ரசிகை. என்னுடைய கிரிக்கெட் மெருகேற எப்போதும் அவர்தான் காரணமாக இருந்துள்ளார் என்று முருகன் அஸ்வின் மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, February 2, 2021, 22:00 [IST]
Other articles published on Feb 2, 2021
English summary
Murugan Ashwin posts heart breaking story about his father after winning Syed Mushtaq Ali Cup for Tamilnadu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X