சக வீரரையே அடிக்க பாய்ந்த மூத்த வீரர்.. எவ்வளவு கோபம் பாருங்க.. ஷாக்கிங் வீடியோ.. விரைவில் விசாரணை!

சிட்னி: பங்காபந்து டி 20 கிரிக்கெட் போட்டி தொடரில் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் நேற்று நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.

வங்கதேச கிரிக்கெட் போர்ட் மூலம் பங்காபந்து டி 20 கிரிக்கெட் 2020 போட்டிகள் நடந்து வருகிறது. வங்கதேசத்தில் இருக்கும் 5 உள்ளூர் அணிகளுக்கு இடையே இந்த கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

இந்த நிலையில் பெக்சிம்கோ தாக்கா, பார்ச்சுன் பாரிசால் அணிகளுக்கு இடையில் டி 20 போட்டி நடைபெற்றது.

வெற்றி

வெற்றி

இந்த போட்டியில் முதலில் ஆடிய தாக்கா அணி 150 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய பாரிசால் அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. தாக்கா அணியின் கேப்டன் ரஹீம் 43 மற்றும் யசீர் அலி 54 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தனர்.

மோசம்

மோசம்

இந்த போட்டியில் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் நேற்று நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. இரண்டாவது இன்னிங்சில் ஸாபிக்கல் இஸ்லாம் பவுலிங் செய்த போது ஆபிப் ஹுசைன் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். இந்த பந்து எட்ஜ் ஆகி மேலே பறந்தது.

கேட்ச்

கேட்ச்

இது ஸ்லிப் இருக்கும் திசையை நோக்கி சென்றது. ஸ்லீப் நின்று கொண்டு இருந்த வீரர்தான் இந்த பந்தை பிடித்து இருக்க வேண்டும். ஆனால் கீப்பிங் செய்து கொண்டு இருந்த ரஹீம் இந்த பந்தை வேகமாக ஓடி சென்று பிடித்தார். கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் இவர் வேகமாக ஓடி சென்று பந்தை பிடித்தார்.

சர்ச்சை

சர்ச்சை

கொஞ்சம் ஸ்லிப் ஆகி இருந்தால் முஷ்பிகுர் ரஹீம் தனக்கு அருகே ஸ்லிப் நின்று கொண்டு இருந்த வீரர் மீது மோதி இருப்பார். இதனால் கோபம் அடைந்த முஷ்பிகுர் ரஹீம் சக வீரரை பார்த்து கோபமாக திட்டினார். அதோடு பந்தை எடுத்துக்கொண்டு அவரை அடிக்க பாய்ந்தார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஏன் கேட்சை தடுக்க பார்த்தாய் என்பது போல முஷ்பிகுர் ரஹீம் சக இளம் வீரரை அடிக்க பாய்ந்தார். அந்த இளமை வீரர் மன்னிப்பு கேட்டும் கூட தொடர்ந்து முஷ்பிகுர் ரஹீம் மோசமாக அவரை திட்டினார். இந்த சம்பவம் களத்தில் பெரிய அளவில் வைரலானது.

விமர்சனம்

அந்த இளம் வீரர் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு நின்ற சம்பவம் பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முஷ்பிகுர் ரஹீம் நடந்து கொண்ட விதம் தொடர்பாக விசாரணை நடத்த வங்கதேச கிரிக்கெட் போர்ட் முடிவு செய்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mushfiqur Rahim ugly attitude with the team goes viral in social media.
Story first published: Tuesday, December 15, 2020, 9:51 [IST]
Other articles published on Dec 15, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X