For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை நான் தான் 7ம் இடத்தில் விளையாட அனுப்பினேன்..! அதனால் தான் இந்தியா தோத்து போச்சு..!

மும்பை: உலக கோப்பையில் தோனியை நான் தான் 7ம் இடத்தில் விளையாட அனுப்பினேன் என்று பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியிருக்கிறார்.

உலக கோப்பையுடன் நாடு திரும்புவோம் என்ற சூளுரையுடன் சென்ற இந்தியா, அரையிறுதியில் நியூசிலாந்துடன் மண்ணை கவ்வியது. அந்த போட்டியில் 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்தியா, 5 ரன்களுக்கே, 3 விக்கெட்டுகளை இழந்து அணியை ஒருவழியானது.

அப்போது 5ம் வரிசையில் அனுபவ வீரர் தோனி வரவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் வந்தார். அவரும் ஆட்டமிழந்த பின்னரும் தோனி களத்துக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வராமல், ஹர்திக் பாண்டியா வந்தார்.

தேவையானதை கொடுத்தா கோலி நல்ல கேப்டனா இருப்பார்.. இந்திய கேப்டனுக்கு வக்காலத்து வாங்கிய பாக். வீரர்! தேவையானதை கொடுத்தா கோலி நல்ல கேப்டனா இருப்பார்.. இந்திய கேப்டனுக்கு வக்காலத்து வாங்கிய பாக். வீரர்!

சொதப்பிய பேட்டிங்

சொதப்பிய பேட்டிங்

ரிஷப், பாண்டியா இருவருமே இளம் வீரர்கள் என்பதால் சூழல் தெரியாமல் சொதப்ப, ஆட்டமிழந்தனர். இதே தோனி, தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அனுப்பப் பட்டிருந்தால், ரிஷப் பன்ட்டை தவறான ஷாட்டை விளையாட விடாமல், அட்வைஸ் பண்ணி பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார். இது தான், அந்த போட்டி முடிந்த நிமிடத்தில் இருந்து இப்போது வரை பேசப்படும் விஷயம்.

செய்தது சரிதான்

செய்தது சரிதான்

ஆனால், அந்த முடிவை நியாயப்படுத்தினார் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. தோனியை 7ம் வரிசையில் இறக்காமல் முன்கூட்டியே இறக்கி இருந்தால் மொத்த விரட்டலும் கையை விட்டு போயிருக்கும் என்று கூறி அந்த முடிவை நியாயம் என்று கூறினார்.

ஏற்க மறுப்பு

ஏற்க மறுப்பு

ஆனால் தோனியை பின்வரிசையில் இறக்கியதிலும் யாருக்கும் உடன்பாடில்லை. ரவி சாஸ்திரியின் விளக்கத்தையும் யாரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. தோனியை 7ம் வரிசையில் இறக்கி சேசிங்கை கெடுத்து, கோப்பையை கோட்டைவிட்டது இந்திய அணி என்று இன்னமும் பலர் கூறி வருகின்றனர்.

ஒப்புக் கொண்டார்

ஒப்புக் கொண்டார்

அந்த சர்ச்சை முடிவை எடுத்தது யார் என்பது தான் இதுவரை தெரியாமல் இருந்து வந்தது. முதல்முறையாக அது நான் தான் என்று பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஒத்துக் கொண்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

எல்லோருடைய முடிவு

எல்லோருடைய முடிவு

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அனுப்புவது தான் திட்டம். தோனியை 7ம் வரிசையில் அனுப்ப வேண்டும் என்பது எல்லோரும் கலந்து பேசி எடுத்த முடிவு. நான் மட்டுமே எடுத்த முடிவு என்பது சரியில்லை என்றார்.

Story first published: Friday, August 2, 2019, 14:47 [IST]
Other articles published on Aug 2, 2019
English summary
My decision to send dhoni as 7th batsman against newzealand says sanjay bangar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X