For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஞ்சிப் போட்டி: "அன்னியர்" ஷேவாக்கை ரசிகர்கள் ஆதரிப்பதா.. "லோக்கல்" ராபின் உத்தப்பா காட்டம்!

By Karthikeyan

மைசூரு: மைசூரில் நடந்த ரஞ்சிக் கோப்பைப் போட்டியின்போது ஹரியானா அணியின் ஸ்டார் வீரரான வீரேந்திர ஷேவாக்குக்கு உள்ளூர் ரசிகர்கள் பெரும் ஆதரவு காட்டியதாலும், கர்நாடக அணியை ஆதரிக்காமல் கேலி செய்ததது தொடர்பாகவும் மூத்த வீரர் ராபின் உத்தப்பா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மைசூரில், கர்நாடக, ஹரியானா அணிகள் மோதிய ரஞ்சிப் போட்டி நடந்தது. இதில் ஷேவாக்கின் அபார ஆட்டம் காரணமாக ஹரியானா வலுப்பெற்றது. இறுதியில் போட்டி டிராவில் முடிவடைந்தது.

Mysuru: Outsider Virender Sehwag gets fans' support; 'Abuses' for home boy Robin Uthappa

இந்த ஆண்டு ரஞ்சிப் போட்டியில், ஹரியானா அணிக்காக ஆடி வருகிறார் வீரேந்திர ஷேவாக். ஓய்வு முடிவை அறிவித்த பிறகு மைசூரில் நடைபெற்ற, கர்நாடகாவுக்கு எதிராக போட்டியில் ஷேவாக்அசத்தலாக ஆடினார்.

இப்போட்டியில் அவர் சதம் போட்டு அசத்தினார். மேலும் போட்டியில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு முழுவதும் சேவாக்குகே இருந்தது. இதனால் கர்நாடக அணியினர் கடுப்பாகி விட்டனர். ஒரு கட்டத்தில் ஷேவாக் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற கர்நாடக வீரர்களுக்கு எதிராக ரசிகர்கள் குரல் எழுப்பியது கர்நாடக வீரர்களை மேலும் கோபமடையச் செய்தது. ரசிகர்களின் ஆதரவால் உற்சாகத்துடன் ஆடினார் ஷேவாக்.

Mysuru: Outsider Virender Sehwag gets fans' support; 'Abuses' for home boy Robin Uthappa

இதுகுறித்து கர்நாடக வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில், கிரிக்கெட் உலகில் ஷேவாக் மிகப்பெரிய ஜாம்பவான். அதே நேரத்தில் கர்நாடக ரசிகர்கள் உள்ளூர் வீரர்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். உள்ளூர் போட்டிகளின் போது ஸ்டேடியத்தில் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு இல்லை.

போட்டியின் போது ரசிகர்கள் உற்சாகப்படுத்துவது இயல்பு. ஆனால் மற்ற வீரர்கள் புண்படும்படி நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். , இனிவரும் போட்டிகளை வேறு ஸ்டேடியத்தில் நடத்த அணி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கர்நாடக கிரிக்கெட் வாரிய ஒருங்கிணைப்பாளர் பாலச்சந்தர் கூறுகையில், உத்தப்பாவின் கருத்து துரதிஷ்டவசமானது. இவ்வாறு உத்தப்பா கூறுவது ஆச்சர்யம் அளிக்கிறது. மேலும், போட்டி நடைபெறும் இடத்தை மாற்றுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை என்றார்.

கர்நாடக அணி வருகிற நவம்பர் 7 முதல் 10 ஆம் தேதி வரை மைசூரில் ஒடிசா அணியுடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 27, 2015, 14:06 [IST]
Other articles published on Oct 27, 2015
English summary
Virender Sehwag gets karnataka fans support for ranji trophy cricket match in mysure
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X