For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

43 பந்துகள், 101 ரன்கள், டி 20 கிரிக்கெட்டில் புயல்வேக சதம்..! அசத்தியவர் இவரா..? மிரண்ட ரசிகர்கள்

வின்ஹோயெக்: நமீபியா நாட்டைச் சேர்ந்த ஜேபி கோட்சி சர்வதேச டி20 போட்டிகளில் 4வது அதிவேக சதத்தினை அடித்து சாதனை படைத்துள்ளார்.

நமீபியா-பொட்ஸ்வனா இடையிலானா சர்வதேச டி 20 போட்டி நடைபெற்றது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற நமிபியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Namibia player kotze set fastest record who scored 100 runs in t 20 match

அதை தொடர்ந்து களமிறங்கிய நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை விளாசியது. இதில் அந்த அணியின் ஜேபி கோட்சி 43 பந்துகளை எதிர்கொண்டு 101 ரன்களை விளாசினார்.

அதில் 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். 43 பந்துகளில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டி 20 அரங்கில் அடிக்கப்பட்ட 4வது அதிவேக சதமாக இது பதிவானது.

சர்வதேச டி20 அரங்கில் அடிக்கப்ட்ட அதிவேக சதங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
1. டேவிட் மில்லர் (தென் ஆப்ரிக்கா) - 35 பந்துகள்
2.ரோகித் சர்மா (இந்தியா) - 35 பந்துகள்
3.ஹஸ்ரத்துல்லா ஷசாய் (ஆப்கானிஸ்தான்) - 42 பந்துகள்
4.ஜேபி கோட்சி (நமீபியா) - 43 பந்துகள்

அதன்பின் விளையாடிய பொட்ஸ்வனா அணி 20 ஓவர்களில் 2விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 124 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணி வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, August 21, 2019, 22:11 [IST]
Other articles published on Aug 21, 2019
English summary
Namibia player kotze set fastest record who scored 100 runs in t 20 match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X